சசிகலா சொத்து குவிப்பு வழக்கில், இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகள் தர வாய்ப்பு?Sponsoredசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி குன்ஹா  அளித்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வராய் கொண்ட அமர்வு விசாரித்து, தீர்ப்பு வழங்க இருக்கிறது. அது இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் நிலையில்,  தமிழக அரசியலில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு நீதிபதிகளும் தனித்தனியாக தீர்ப்பு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கினால், இந்த வழக்கு மீண்டும் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் வசம் ஒப்படைக்கப்படும். இறுதியாக அந்த அமர்வு சொல்லும் தீர்ப்பே இறுதியானதாகும்.

Sponsored
Trending Articles

Sponsored