ஓ.பி.எஸ் அணி எண்ணிக்கை இனிமேல் அதிகரிக்காது: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுகூவத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ''முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் கை கோத்து, தனி அணியை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். அந்தக் கூட்டத்தின் எண்ணிக்கை இனிமேல் அதிகரிக்காது. அவர்களே அதை உணரும் நேரம் வரும். அதே சமயத்தில் அதிமுகவுக்கு ஆட்சி அமைக்கக் கூடிய வகையில் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் இருந்தும், அதற்கான கடிதத்தை ஆளுரிடம் சமர்ப்பித்தும், ஆளுநர் எங்களை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது, ஜனநாயக வரலாற்றில் கறுப்பு நாளாக அமையும். அதனால் ஜனநாயக முறையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வகையில் ஆளுநர் எங்களை அழைக்க வேண்டும். இன்றோ நாளையோ, எங்களை ஆட்சியமைக்க அழைப்பார் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored