"தமிழக அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது" - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டிSponsoredஉச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "தமிழக அரசியல் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறேன். உச்ச நீதிமன்றம் சசிகலா வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, கீழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உறுதி செய்துள்ளது. அதனடிப்படையில் சிறைக்குச் செல்வது குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பை முழுமையாக படிக்கவில்லை. இந்த தீர்ப்பை பொறுத்தவரை மறு ஆய்வு மனு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. தேர்தல் விதிமுறையின்படியும், சட்ட விதிகளின் காரணமாகவும் தண்டனை பெற்றவர் அமைச்சராகவும், முதல்வராகவும் வாய்ப்பு குறைவு. இதுபற்றி சட்ட நிபுணர்கள்தான் கருத்து கூற வேண்டும். ஆனால், தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது." என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored