"நாங்க இதுபோல பல தீர்ப்புகளை பார்த்திருக்கிறோம்." எம்.எல்.ஏ-க்களிடம் சொன்ன சசிகலா.Sponsoredகூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-வான பழனியப்பன், சசிகலா, இதுபோல பல தீர்ப்புகளை பார்த்திருப்பதாகவும், அம்மா வழிநடத்திய இந்தக்கட்சியை பாதுகாப்பேன் என்று சசிகலா சொல்லியதாக நிருபர்களிடம் சொல்லி இருக்கிறார். "சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்தபிறகு எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். அவர் தலைமையில் தான் எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுத்தோம். சசிகலா இப்போதும் மனதைரியத்துடன் இருக்கிறார். இதுபோல நாங்க பல தீர்ப்புகளை பார்த்திருக்கிறோம். என்னைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் என சின்ன அம்மா தைரியம் சொன்னார். அம்மா வழிநடத்திய இந்தக்கட்சியை பாதுகாப்பேன் எனக் கூறியவர். மீண்டும் அம்மாவுக்கு நல்ல பெயரை சேர்க்கும் வகையில் கட்சியை வழிநடத்துவோம்.  கவர்னர் எங்களை அழைக்கும் வரையில் நாங்கள் இங்கேயே தான் இருப்போம். பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் எங்களிடத்தில் தான் இருக்கிறார்கள். நாங்கள் தான் வெல்வோம்." என்று நிருபர்களிடம் சொல்லி இருக்கிறார் பழனியப்பன்.

Sponsored
Trending Articles

Sponsored