இவர்களில் யார் சின்ன சின்னம்மா? - அ.தி.மு.க-வினரின் தேடல்?!Sponsoredஅம்மாவுக்கு அடுத்து சின்னம்மா எப்படியோ அதே மாதிரி சின்னம்மாவுக்கு அடுத்துச் சின்ன சின்னம்மா தானே அ.தி.மு.க-ல தலைவரா இருக்க முடியும்! காலங்காலமா அ.தி.மு.க-க் கட்சில அதானே வழக்கம். அதன்படி அ.தி.மு.க-வின் சின்ன சின்னம்மாவா யார் இருப்பாங்கன்னு ரணகளமா உட்கார்ந்து யோசிச்சு பார்த்ததுல இவங்க எல்லாம் மைண்டுக்கு வந்தாங்க. இதோ அ.தி.மு.க-வின் அடுத்தச் செல்ல சின்ன சின்னம்மாவுக்கான தேடல்... 


வளர்மதி : 

Sponsored


அ.தி.மு.க-வோட மிக முக்கியமான உறுப்பினர் யார்ன்னு பார்த்தா கண்டிப்பா அது வளர்மதியாத்தான் இருப்பாங்க. இவங்க பேசுற ஒவ்வொரு புரட்சிகரமான கருத்துகளையும் கேட்குற மத்த கட்சித் தொண்டன் கூட இவங்களை அ.தி.மு.க-வின் சின்ன சின்னம்மாவா அறிவிச்சிடுவான். அந்த அளவுக்குச் சின்னம்மாவோட செயல்பாடும் இவங்களோட செயல்பாடும் ஒரே மாதிரி இருக்கும்.ரெண்டு பேர் பேசுறதையும் பக்கத்து பக்கதுல வச்சுப் பார்த்தா உங்களுக்கேத் தெரியும் ரெண்டு பேரும் ஒண்ணுதான்னு! அந்த அளவுக்குப் பேசுறப்ப இவங்க முகத்துல சகல அபிநயங்களும் தாண்டவமாடும்! அ.தி.மு.க-வின் சின்ன சின்னம்மாவா வருவதற்கான எல்லாத் தகுதியும் ஒண்ணா இருக்குற வளர்மதிக்கு ஆதரவு தெரிவிக்க ஆசைபட்டீங்கன்னா இவங்களுக்குச் சப்போர்ட் பண்ணி வாட்ஸ்-அப்பில் ஃபார்வேட் மெசேஜ் அனுப்புமாறு சத்தமாகவும், டெரராகவும் கேட்டுக் கொள்கிறோம்! 

Sponsoredகோகுல இந்திரா : 

அ.தி.மு.க-வின் மிகச் சிறந்த பேச்சாளர்னா அது கண்டிப்பா கோகுல இந்திராவாத்தான் இருக்கும். அந்த அளவுக்கு இவங்க பேச்சு எல்லாத்துலயும் புரட்சிகரமான கருத்துகள் இருக்கும். இவங்க அமைச்சர் பதவியை அழுதுகிட்டே ஏற்றப்பவே நேரா இவங்களைச் சின்னம்மாவா மாத்தி இருக்கணும். ப்ச்ச்ச்.. ஆனால், அதுக்குச் சரியான சூழ்நிலை அமையாததால இப்போதாவது இவங்களைச் சின்ன சின்னம்மாவா அறிவிச்சா நல்லா இருக்கும். தமிழ்நாடு எங்கும் இருக்கும் அ.தி.மு.க-த் தொண்டர்படைல முக்கால்வாசி பேர் இவர் எப்ப சின்ன சின்னம்மாவா பதவி ஏற்பாங்கன்னுதான் எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்காங்க. இவர் அமைச்சரா இருந்தப்போ செய்த மக்கள் சேவைகளையும், நலத்திட்டங்களையும் கருத்தில் கொண்டு இவங்களைச் சீக்கிரமே அ.தி.மு.க-வின் சின்ன சின்னம்மாவா அறிவிக்கணும்.இவருக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள் இவரை வாழ்த்தி ட்விட்டரில் புரியாத மாதிரி ஹேஷ் டேக்குடன் எதையாவது எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 
சசிகலா புஷ்பா : 

கழகத்தில் இருந்து கொண்டே கலகம் செய்தவர் இவர்! அ.தி.மு.க-வுல இருந்துக்கிட்டே அக்கட்சிக்கு எதிரா பேசுன ஒரே ஆள் சசிகலா புஷ்பாதான். அப்பவே இவரோட ஆதரவாளர்கள்  “எங்க தலைவிக்கு எவ்வளவு தில் பாத்தியா?''னு பேசிக்கிட்டு இருந்தாங்க. அ.தி.மு.க-ல இவங்களுக்குனே தனியா ஒரு ரசிகர் மன்றமே இருக்கு. எப்பவும் எதாவது பிரச்னைல மாட்டி லைம் லைட்லயே இருக்குற சசிகலா புஷ்பா சின்ன சின்னம்மா ஆனா அ.தி.மு.க-வும் கண்டிப்பா எப்பவும் டிரெண்டிங்லயே இருக்கும். இப்ப இருக்குறத விட அகில உலக அளவுல ஃபேமஸ் ஆகணும்னா கண்டிப்பா இவங்கதான் அ.தி.மு.க-வின் சின்ன சின்னம்மா ஆகணும். முக்கியமா இவங்க பேர்ல இருக்குற சசிகலாவே போதும் இவங்களை அடுத்தச் சின்ன சின்னம்மா ஆக்குறதுக்கு. இவங்களுக்கு ஆதரவு தெரிவிக்கணும்னா யூ டியூபில் இவரை வாழ்த்தி வீடியோ போடுமாறு அன்போடும் பண்போடும் கேட்டுக்கொள்கிறோம். 


தீபா : 

அ.தி.மு.க-ல சசிகலாவுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவு உரிமை தீபாவுக்கும் இருக்கு. சின்னப் புரட்சித் தலைவி தீபா முறைப்படி பார்த்தா கட்சியோட சின்னம்மாவாத்தான் ஆகி இருக்கணும்.பரவாயில்லை... இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. கட்சியோட சின்னம்மா ஆக முடியாத தீபா எப்படியாவது சின்ன சின்னம்மா ஆனா நல்லாதான் இருக்கும். ஏற்கெனவே கட்சியில இவங்களைச் சப்போர்ட் பண்றத்துகுன்னே பெரிய ஃபாலோயர் குரூப் இருக்கு. இவங்க தலைமையை ஏத்துக்கத்தான் தமிழ்நாட்டுல பல அ.தி.மு.க-த் தொண்டர்கள் தவமா தவம் கிடக்குறாங்க. ஆகவே மக்களே இவங்களை அ.தி.மு.க-க் கட்சியில் சின்ன சின்னம்மாவாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமா, யாருமே இல்லாத கூகுள் பிளஸில் உடனடியாகப் பெரிய போஸ்ட் ஒன்றை போடவும்! 


சி.ஆர்.சரஸ்வதி : 

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கட்சி உறுப்பினர், பேச்சாளர் கண்டிப்பா சி.ஆர்.சரஸ்வதியாதான் இருப்பாங்க. சிலர் பேசுறது எல்லாம் கேட்குறவங்களுக்குத்தான் புரியாது பட் சி.ஆர்.சரஸ்வதி பேசுறதுலாம் அவங்களுக்கே புரியாது. இவங்க தமிழ்ல பேசுறதைக் கேட்டா ஒரு மாதிரி இருக்கும், இங்கிலீஷ்ல பேசுறதைக் கேட்டா இன்னொரு மாதிரி இருக்கும், மொத்தத்துல இவங்க பேசுறதைக் கேட்டாலே புது மாதிரிதான் இருக்கும். எப்பவும் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம சம்பந்தமே இல்லாத விஷயத்தைப் பேசி சம்பந்தப்படுத்துற சரஸ்வதி சின்ன சின்னம்மாவா மாறினா அ.தி.மு.க-வ ஒருத்தரும் கேள்வி கேட்க முடியாது. மத்த எல்லாரையும் விட இவங்களுக்குத்தான் சின்ன சின்னம்மா ஆக அதிகத் தகுதி இருக்கு.சி.ஆர்.சரஸ்வதி சின்ன சின்னம்மா ஆக வேண்டுமா உடனடியாகப் ஃபேஸ்புக்கில் அவருக்கு ஆதரவாக மீம் போடுமாறு தாறுமாறாகக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். 

- லோ.சியாம் சுந்தர். 


 Trending Articles

Sponsored