''கல்லறையில் விழுகின்ற அடியைப் பார்த்தால்..."-ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கிளப்பும் சர்ச்சை#TNPolitics



Sponsored



ஈரோட்டில் நடந்த  திருமண விழாவில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசும்போது, "தேசிய அளவில் தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் வழக்கு தொடுத்து, மிகப்பெரிய தண்டனையை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அயோக்கியத்தனம் செய்தால் தப்பிக்க முடியாது என்பதை உணரச்செய்திருக்கிறார். தவறு செய்தவர்களும் மக்களை ஏமாற்றியவர்களும் கல்லறைக்கு அல்லது சிறைக்குத்தான் செல்ல வேண்டும். இல்லையெனில் தப்ப முடியாது. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. ஜெயலலிதா கல்லறைக்குள் இருக்கும்போதே இப்படி அடி விழுகிறதே, அவர் உயிரோடு இருந்தபோது எப்படி அடி வாங்கி இருப்பார் என அனைவரும் சிந்திக்க வேண்டும். கிராமத்தில் உள்ள மக்கள் ஜெயலலிதாவை அடித்துக் கொன்றுவிட்டதாகச் சொல்கின்றனர். நாட்டைக் குட்டிச்சுவராக்கினால் போதும் என நினைத்தால், சிறையில் போய் நிம்மதியாக இருக்கவேண்டியதுதான்" என்றார்.

Sponsored




Trending Articles

Sponsored