சசிகலா மறுசீராய்வு செய்தாலும் வெளியே வரமுடியாது - மார்க்கண்டேய கட்ஜுSponsoredதிருச்சி என்.ஐ.டியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக திருச்சி வந்திருந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு நிகழ்ச்சிக்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர்,


"முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுள்ளார். கவர்னர் அவரை ஆட்சி அமைக்க அழைத்தது அவரது முடிவு. அதுகுறித்து கருத்து சொல்ல முடியாது. ஆனால் விரைவில் நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரது ஆட்சி நிலைக்குமா என்பது அப்போது தெரியவரும். எடப்பாடி பழனிசாமியை எல்லோரும் விமர்சிக்கிறார்கள். அவர் முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். அவரை இப்போது விமர்சனம் செய்ய வேண்டாம். அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக வந்த உடன் இது குண்டர்கள் ஆட்சி என்றெல்லாம் குறைகூறினார்கள். அது ஆறுமாதங்களுக்குப் பிறகு மாறியது. அதைபோலத்தான் ஆறுமாதம் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியையும் பொறுத்திருந்து அவரின் செயல்பாடுகளை கவனிப்போம்.

Sponsored


Sponsoredநாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும் அதிகரித்துள்ளது. அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு, உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கிறது. இது ஒரு அரசியல் நாடகம். ராமர் கோவில் கட்டினால் இந்தியாவில் வறுமை குறைந்துவிடுமா? இல்லை வேலைவாய்ப்பின்மை தீர்ந்துவிடுமா?. 


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தரப்பில் இனி மேல்முறையீடு செய்து வெளியில் வர முடியாது. இந்த வழக்கில் மறுசீராய்வு மனுதான் போடமுடியும், உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்துப் போடப்பட்ட 90 சதவிகிதமான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடியே செய்யப்பட்டன. அதனால்தான் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தாலும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடியே செய்யும் என்கிறேன்" என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்Trending Articles

Sponsored