"சசிகலா சிறை செல்ல வருத்தப்படவில்லை" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சுSponsoredஎடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.எல்.ஏ, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று, "அ.தி.மு.க அரசு எஞ்சியுள்ள காலம் வரை மக்கள் பயணத்தைத் தொடரவேன்டும் என்பதே சசிகலாவின் ஆசை. ஆனால், இந்த ஆட்சியையும் கட்சியையும் ஒழித்து, தேர்தலைக் கொண்டுவர வேண்டும் என்பது பன்னீர்செல்வத்தின் ஆசை. 124- எம்.எல்.ஏக்களும் ஒருமித்த கருத்தோடு ஒரு தாயின் பிள்ளைகளாக இருந்து வருகிறோம். சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு, சசிகலா எங்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், 'நான்(சசிகலா) அ.தி.மு.க. தொண்டர்களினுடைய நினைவாகவே எப்போதும் இருப்பேன். புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் அனைத்து மக்களுக்கும் நற்பணிகளைச் செய்ய வேண்டும். நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதே நீங்கள் செய்யும் நன்றிக்கடன். சிறைக்குச் செல்வதற்காக நான் எந்த வருத்தமும் அடையவில்லை. அதிலிருந்து மீண்டு வருவேன்' என சசிகலா சொன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Sponsored
Trending Articles

Sponsored