ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு அ.தி.மு.க வரிசையில் இடம்?Sponsoredமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி துாக்கியதையடுத்து, அவருக்கு 10 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, பெரும்பான்மையை இன்று நிரூபிக்க இருக்கிறார். இதனால், சட்டசபை  இன்று கூட்டப்பட உள்ளது. இந்நிலையில், சட்டமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு அ.தி.மு.க  எம்.எல்.ஏக்களின் வரிசையில் அமர்வதற்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், பன்னீர்செல்வத்துக்கு மூன்றாவது வரிசையில் முன்னாள் அமைச்சர்களின் பின்னால், 82-ம் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored