உ.பிக்கு தத்துப்பிள்ளை தேவையில்லை - மோடிக்கு பதிலடி கொடுத்த மாயாவதிSponsoredஉத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பின்னர் 23-ம் தேதி 53 தொகுதிகளுக்கான நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் பேச்சாளர் பிரியங்கா, பிஎஸ்பி கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திரமோடி உத்திரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போது உ.பி.யின் தத்துப்பிள்ளை இந்த மோடி என பேசியிருந்தார். இந்நிலையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் வேட்பாளர் மாயாவதி உ.பிக்கு தத்துப்பிள்ளை தேவையில்லை, உ.பி மக்கள் சொந்த மகளாகிய என்னையே தேர்வு செய்வார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.  இதற்கு முன்னர் பிரியங்கா காந்தி உ.பிக்கு தத்துப்பிள்ளை தேவையில்லை என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored