கார்த்தி சிதம்பரத்தின் மீது சுப்பிரமணிய சாமி புகார்!பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி, கார்த்தி சிதம்பரத்தின் மீது மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். முன்னாள் நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், இந்திய நிதித் துறைக்குத் தெரியாமல் 21 வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளதாக சுப்பிரமணிய சாமி புகார் அளித்துள்ளார். மேலும், அவர் கார்த்தி சிதம்பரத்தின் மீது ஏற்கெனவே கொடுத்த எந்தப் புகார் மீதும் நிதித்துறையால் விசாரணை நடத்தப்படவில்லை என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுப்பிரமணிய சாமி சுட்டிக்காட்டியுள்ளார். 2014ல் நடந்த லோக் சபா தேர்தலில், கார்த்தி சிதம்பரம் இந்தத் தகவல் எதையும் அளிக்காமல் மறைத்து உள்ளதால், அவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார். சுப்பிரமணிய சாமியின் இந்தப் புகாரை கார்த்தி சிதம்பரம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored