தி.மு.க உண்ணாவிரதப் போராட்டம் - காங்கிரஸ் ஆதரவுதி.மு.க சார்பில் நாளை நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில், காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், சனியன்று நடைபெற்ற பெரும்பான்மை வாக்கெடுப்பின்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மேலும், ரகசிய வாக்கெடுப்பு என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும், சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, தி.மு.க சார்பில் நாளை மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில், மாவட்டத் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பர் என்று கூறியுள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored