திமுக போராட்டத்தில் நாராயணசாமி பங்கேற்புSponsoredதி.மு.க சார்பில் புதுச்சேரியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். பிப்ரவரி 18 ம் தேதி தமிழக சட்டப்பேரவையில், நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் வலுக்கட்டாயமாக பேரவையில் இருந்து வெளியேற்றினர். இதனைக் கண்டித்து, தி.மு.க சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் தலைமையில்,அந்தந்த மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான தி.மு.க தொண்டர்களும், தி.மு.க தலைவர்களும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் பங்கேற்றனர். திருச்சி, தென்னூர் அண்ணாநகர் உழவர்சந்தைப் பகுதியில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Sponsored
Trending Articles

Sponsored