போலிஸ் பாதுகாப்பை மறுத்தார் விருதுநகர் எம்.பி.Sponsoredகடந்த வாரம் சட்ட மன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடு பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்தார்.இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏகளுக்கும், ஆதரவு அளித்து பேசிய எம்.பிக்களுக்கும் எதிராக மக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மக்கள் மத்தியில் அதீத எதிர்ப்பு நிலவுவதால் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கு தமிழக அரசால் போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விருநகர் தொகுதி அதிமுக எம்.பி ராதாகிருஷ்ணன் தனக்கு அளிக்கப்பட இருந்த போலிஸ் பாதுகாப்பை மறுத்துள்ளார்.மேலும் ``மக்கள்தான் என்னை தேர்ந்தெடுத்தது, அவர்கள் என்னை புரிந்துகொள்வார்கள்.அவர்களின் ஆதரவு எனக்கு எப்போது போல இருக்கும்.எனவே எனக்கு போலிஸ் பாதுகாப்பு எல்லாம் தேவையில்லை`` என்று கூறியுள்ளார்.

Sponsored


,

Sponsored
Trending Articles

Sponsored