ஜெ. பிறந்தநாளும் நள்ளிரவுப் பிரார்த்தனையும்.!Sponsoredஅ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் 69- வது பிறந்த தினம் இன்று. ஜெயலலிதா  மறைவுக்குப் பிறகு வரும் முதல் பிறந்த தினம் என்பதால், அ.தி.மு.க வினர் இதைச் சோக நிகழ்வாகத்தான் பார்க்கின்றனர். 

சசிகலா அணி, பன்னீர் அணி என அ.தி.மு.க பிளவுபட்டு நிற்கும் நேரத்தி்ல், ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை எந்த வகையில் கொண்டாடுவது என்ற போட்டி இரு தரப்பிலும் எழுந்துள்ளது. இந்நிலையில்,  ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24-ம் தேதி பன்னிரண்டு மணிக்கு,  சர்வமத பிராத்தனையுடன் மெழுகுவத்தி ஏந்தி, அவரது சமாதியில் பிரார்த்தனை செய்துள்ளது  ஓர் அமைப்பு.

Sponsored


தமிழகத் தெலுங்கு ரெட்டியார்  சங்கத்தின் தலைவர் ஜெகதீஷ்வர ரெட்டிதான் நள்ளிரவுப் பிராத்தனையை நடத்தியவர். ஜெயலலிதாவின் சமாதிக்கு, இரவு பன்னிரண்டு மணிக்கு தனது அமைப்பைச் சேர்ந்த 50 பேருடன் சென்று,  மலரஞ்சலி செலுத்தி, மெழுகுவத்தி ஏற்றி சமாதியைச் சுற்றிவந்தார்கள். பின்னர், சர்வ மத போதகர்களைக்கொண்டு சிறப்புப் பிராத்தனைசெய்தனர். ஜெகதீஸ்வர ரெட்டி, “நான் அம்மாவின் தீவிர ரசிகன். அவர் இல்லாமல் கொண்டப்படும் முதல் பிறந்தநாள் இது. அதனால்தான் முதல் ஆளாக அவர் சமாதிக்கு 12 மணிக்கே வந்து, அஞ்சலி செலுத்தினோம்” என்றார் உற்சாகமாக. 

Sponsored


ஜெயலலிதாவின் சமாதியில்,  நள்ளிரவில் தீடீர் என நடைபெற்ற இந்தப் பிராத்தனையைப் பார்த்து, பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள்  பதற்றம் அடைந்துவிட்டனர். 

அ.சையது அபுதாஹிர்

படங்கள்.- ஆ.முத்துகுமார்Trending Articles

Sponsored