மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் கோவையில் நாளை நடக்கிறதுSponsoredமதிமுகவின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பொதுக்குழு கோவையில் நாளை நடைபெறுகின்றது. 

கோவை சித்தாபுதூரில் காலை 10 மணிக்கு உயர்நிலைக் கூட்டம் நடக்கிறது. இதையடுத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், மாலை 4 மணிக்கு, காந்திபுரத்தில் உள்ள ஸ்ரீ ஆர்.வி. ஹோட்டலில் நடைபெறுகின்றது.

Sponsored


இதையடுத்து அக்கட்சியின் 25-வது பொதுக்குழு, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, சிங்காநல்லூரில் உள்ள ஸ்ரீ சாய் திருமண மஹாலில் நடைபெறுகின்றது. இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.

Sponsored
Trending Articles

Sponsored