தமிழிசை, பொன்னார், சுப்பிரமணியன் சுவாமி - 'ஆளுக்கு ஒரு கருத்து' பா.ஜ.க!Sponsoredகாலங்காலமா தமிழ்நாட்டு அரசியல்ல என்ன நடந்தாலும் அதுல மக்களோட விருப்பம் என்னவோ அதுக்கு அப்படியே எதிரா கருத்து சொல்றதுதான் தமிழ்நாட்டு பா.ஜ.க-வோட வேலை. அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டமா இருந்தாலும் சரி, ஜல்லிக்கட்டு போராட்டமா இருந்தாலும் சரி, எல்லாத்துலயும் மக்களோட விருப்பத்துக்கு எதிரா ஏதாவது ‘அகா துகா’ கருத்துகளைச் சொல்லிட்டு, அதுக்கு மக்களோட ரிவீட்டைப் பார்த்ததும் அப்படியே அப்பீட் ஆகிடுவாங்க. என்னதான் மக்களுக்கு எதிரான கருத்தைச் சொன்னாலும், இது அவரோட தனிப்பட்ட கருத்துன்னு சொல்லி, கடைசியா எஸ்கேப் ஆகிடுவாங்க. இப்போ நடக்கிற ஹைட்ரோ கார்பன் போராட்டத்துலயும் அவங்க இதே மாதிரிதான் தனிப்பட்ட கருத்துகளை நிறையச் சொல்லி இருக்காங்க. என்னன்னு நீங்களே பாருங்க.

இல.கணேசன் :

“ஒரு மாநிலத்தோட வளர்ச்சிக்காக ஒரு கிராமம் தியாகம் செஞ்சா பரவாயில்லை, ஒரு நாட்டோட வளர்ச்சிக்காக ஒரு மாநிலமே தியாகம் செஞ்சாலும் பரவாயில்லை''னு இந்த நூற்றாண்டின் கமென்ட் ஆஃப் தி இயர் ஒண்ணு சொல்லி இருந்தார். தியேட்டர்ல தொடக்கத்துல `என்னதான் ஆகிவிட்டது நம் நாட்டிற்கு''ன்னு சொல்ற மாதிரி அவர் ஃபீலிங்கோட சொன்ன கருத்துக்கு சோஷியல் மீடியாவில செம ரெஸ்பான்ஸ். இந்த வாரம் எந்த பிரேக்கிங் நியூஸும் வரலையேனு ஃபீலிங்ல இருந்தவங்களுக்கு நல்லதொரு மீம் மெட்டீரியலா இல.கணேசன் மாட்டியதுதான் பா.ஜ.க. வரலாற்றில் மிகப்பெரிய காமெடிக் கருங்கல்.

Sponsored


Sponsored


எச்.ராஜா :

தமிழ்நாட்டுல யார் பா.ஜ.க-வுக்கு எதிரா பேசினாலும் உடனே அவங்களைத் தேசத்துரோகின்னு பச்சை குத்தி ஃபாரின் அனுப்பப் பார்க்கிறதுதான் அவங்க கட்சியோட வேலை. இந்த மாதிரி பச்சை குத்துற வேலையைத் தன்னோட அரசியல் ஹாபியாவே வெச்சுப் பேசிக்கிட்டு இருக்கிறதுதான் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எச்.ராஜாவோட வேலை. அவர், இந்த ஹைட்ரோ கார்பன் போராட்டத்துல ஈடுபடுறவங்களை தேசத்துரோகினு எப்பவும் போல சொல்லி இருந்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துலேயாவது யூத்லாம் இருந்தாங்க. அவங்க மேல இருந்த கோவத்துல அவங்களைத் தேசத்துரோகின்னு சொல்லி இருந்தார்னு வெச்சுக்கலாம். ஆனா, இந்தப் போராட்டத்துல இருக்கிற முக்கால்வாசிப் பேர் 70 வயசுக்கு  மேல உள்ள விவசாயிங்க. விவசாயிங்க எப்போ ப்ரோ தேசத்துரோகிங்க ஆனாங்க? நீங்க சொல்ற கணக்குப்படி பார்த்தா, தமிழ்நாட்டுல இருக்குற ஏழு கோடிப் பேரும், இனி பிறக்கப்போற பல கோடிப் பேரும் தேசத்துரோகிதானே... எல்லாத்தையும் விட தமிழ்நாட்டுல இருக்குற நீங்களும்கூட தேசத்துரோகின்னு நினைக்கிறப்போ துயரம் த்ரோட்டை அடைக்குது ப்ரோ. அதெல்லாம் சரி, பா.ஜ.க-வை எதிர்த்தால் மொத்த இந்தியாவையும் எதிர்த்த மாதிரி ஃபார்ம் பண்றீங்களே... பா.ஜ.க-தான் மொத்த இந்தியாவா...? சொல்லுங்க...சொல்லுங்க.

தமிழிசை செளந்தர்ராஜன் :

இந்த நூற்றாண்டின் அதிகபட்ச சமாளிப்புகளைச் செஞ்சு சிறந்த சமாளிப்பாளர் விருது வாங்கி இருக்கிறவர்தான் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன். அவங்க கட்சியில் யார் என்ன கருத்து சொன்னாலும் கஷ்டப்பட்டு அதுக்கு விளக்கம் அளித்து, டயர்ட் ஆகிறதுதான் இவங்க வேலை. சில சமயம் இவங்களும் அமைதியா இல்லாம சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லி கலாய் வாங்குவாங்க. அந்த மாதிரி, '`என்னவென்று தெரியாமல் எதற்கெடுத்தாலும் போராடுவது நல்லதல்ல''ன்னு இந்தப் போராட்டம் பற்றி கருத்து சொல்லி இருந்தாங்க. ஒரு வாரமா கான்செப்ட் கிடைக்காம அமைதியா இருந்த மீம் பாய்ஸ், இப்படி ஒரு கான்செப்ட் கிடைச்சா சும்மா இருப்பாங்களா... நெவர். அவங்க கருத்து சொன்னப்போ கலாய்க்க ஆரம்பிச்சவங்கதான், இன்னும் கலாய்ச்சுக்கிட்டு இருக்காங்க. கருத்து சொல்றதுலேயும் இவங்கதான் பெஸ்ட்; கலாய் வாங்குறதுலேயும் இவங்கதான் பெஸ்ட். தி பெஸ்ட்.

பொன்.ராதாகிருஷ்ணன் :

கட்சியில இருக்கிற எல்லோரும் வகை வகையா கருத்து சொன்னாலும் எதுவுமே சொல்லாம, அமைதியா மணிரத்னம் பட ஹீரோ மாதிரி காலத்தைப் போக்குறவர்தான் பொன்.ராதாகிருஷ்ணன். நான் எப்பவாவதுதான் கருத்து சொல்லுவேன். ஆனாலும், ஏடாகூடமா கருத்து சொல்லுவேன்னு சபதம் எடுத்து இருக்கிற பொன்.ராதாகிருஷ்ணன், இந்த ஹைட்ரோ கார்பன் போராட்டத்துக்கும் ஒரு புரட்டாசிகர கருத்து சொல்லி இருக்கார். “பயனுள்ள திட்டங்களை முட்டாள்தனமாக எதிர்க்காதீர்''னு அவர் சொன்ன கருத்துக்கு இன்னும் சோஷியல் மீடியாவில் மரணமா கலாய்சுக்கிட்டு இருக்காங்க. இந்தத் திட்டத்தால வர்ற பிரச்னை எல்லாத்தையும் பட்டியிலிட்டு, இதுதான் இந்தத் திட்டத்தின் பயன்கள்னு சொல்லி, அவருக்கு டேக் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதெல்லாம் இருக்கட்டும் பாஸ்... இது பயனுள்ள திட்டம்தான், ஆனா யாருக்கு பயனுள்ள திட்டம்னு சொல்லவே இல்லையே. சொல்வீர்களா....நீங்கள் சொல்வீர்களா?

சுப்பிரமணியன் சுவாமி :

தமிழ்நாட்டுல இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு எதிரா கருத்து சொல்வார், பா.ஜ.க-வில இருந்தாலும் பா.ஜ.க-வுக்கு எதிரா கருத்து சொல்வார். இவர் எப்போ யாருக்கு எதிரா கருத்து சொல்வார்னு யாருக்குமே தெரியாது, ஏன் அவருக்கே தெரியாது. ஆனா, கருத்து சொல்லவேண்டிய நேரத்துல கரெக்டா தப்பான ஒரு கருத்து சொல்லிடுவார். பட்சே எப்பவும் பேசிக்கிட்டே இருக்கிற சுப்பிரமணியன் சுவாமி, இதுக்கு மட்டும் இன்னும் ஏனோ எந்தக் கருத்துமே சொல்லாம இருக்கார்.

அப்படியே சொன்னாலும் அது அவரோட தனிப்பட்டக் கருத்துன்னு சொல்லி, மொத்த கட்சியும் எஸ்கேப் ஆகிடுவாங்க. ஆனாலும், அவர் காமெடியா எப்போதும்போல எதாவது கருத்து சொல்லுவார்னுதான் காத்துக்கிட்டு இருக்கோம். வி ஆர் வெயிட்டிங்!

- லோ.சியாம் சுந்தர்.Trending Articles

Sponsored