நேரு, காந்தி, அண்ணா ஆன்மா எல்லாம் கனவுல வந்தா என்ன பேசும் தெரியுமா?Sponsoredதமிழ்நாட்டுல இப்போ இருக்கிற புது ட்ரெண்ட், ஆன்மா பேசுற ட்ரெண்ட்தான். எப்போ யாரோட ஆன்மா யார் கனவுல வந்து பேசும்னே தெரியாத அளவுக்கு தினமும் ஏதாவது ஒருத்தர் கனவுல ஆன்மா வந்து ஏதாவது சொல்லிடுது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஓ.பி.எஸ் கனவுல வந்த ஜெயலலிதா ஆன்மா மாதிரியே, இப்போ ஒரு சாமியார் கனவுல எம்.ஜி.ஆர் ஆன்மா வந்து பேசி இருக்கு. இப்படி இன்னும் யார் யார் ஆன்மா எல்லாம் மக்கள் கனவுல வந்து பேசும்னு ஒரு மாதிரி, புது மாதிரி யோசிச்சுப் பார்த்தோம். அதன்படி இந்த அரசியல்வாதிகள்  ஆன்மா எல்லாம் கனவுல வந்து பேசுனா இப்படித்தான் பாஸ் இருக்கும்.


ஹிட்லர் ஆன்மா :

Sponsored


காலங்காலமா கோலிவுட் சைட்ல உள்ள ஆன்மா மட்டுமே வந்து பேசிக்கிட்டு இருக்கிறதால ஒரு மாறுதலுக்கு ஜெர்மனிவுட்ல (அப்படிலாம் ஏதும் இருக்கா என்ன?) இருந்து ஹிட்லரோட ஆவி வந்து அமெரிக்க மக்கள் கனவுல பேசி இருக்கு. `ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... ரொம்ப காலத்துக்கு முன்னாடி ஜெர்மனிக்கு எப்படி நான் கிடைச்சேனோ அப்படித்தான் இப்போ உங்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் கிடைச்சுருக்கார். அவர் ஒரு மீசை இல்லாத ஹிட்லர். தமிழ்நாட்டுக்கு ஒரு சீமான் மாதிரியே அமெரிக்காவுக்கு ஒரு ட்ரம்ப். முருகனோட முதல் வாரிசே ட்ரம்ப்தான் மக்களே. அவர் முடி கலரோ வொயிட்டு' அமெரிக்காவை ஆக்குவாரு வெயிட்டு. அவர்தான் மக்களே என் வாரிசு ஆஃப் வருங்காலம். அவர் ஆசைப் படியே அமெரிக்காவைச் சுற்றி ஆறடிக்கு சுவர் கட்ட எல்லோரும் அவருக்கு ஹெல்ப் பண்ணணும். அப்புறம் 'ஆறடிச் சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே' பாட்டை உங்க எல்லோருக்கும் ஆகாயத்துல இருந்து டெடிகேட் பண்றேன்.

Sponsoredநேரு ஆன்மா :

`அதோ பாரு காரு, காருக்குள்ள யாரு, நேரு மாமா பாரு`ன்னு ரொம்ப காலமா என்னை வெச்சு பாட்டுப் பாடுற நம்ம ஊர் மக்களோட கனவுல என் ஆன்மா வந்து ஏதாவது சொல்லனும்னு ஆசைப்படுது... ஆனா என்ன சொல்லனும்னுதான் தெரியலை. என் வாரிசு ராகுல் காந்தியை எல்லாரும் பப்பு பப்புனு ஓட்டுறது கொஞ்சம்கூட பிடிக்கலை மக்களே. ராகுல் டிராவிட் எப்படி கிரிக்கெட்டுக்கு சுவரோ அந்த மாதிரி அரசியலுக்கு சுவர் ராகுல் காந்திதான். ரொம்ப காலமா டொக் வெச்சு விளையாண்டுக்கிட்டு இருக்கிற ராகுல் எப்போதாவது ஒருநாள் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பார் மக்களே... வெயிட் பண்ணுங்க. நான் இதை நேரா போய் ராகுல் கனவுலயே சொல்லி இருப்பேன். ஆனா அவர் போடுற ட்வீட்டையே கண்டுக்காத நீங்க ஆன்மா பேசுனதா சொன்னா மட்டும் நம்பவா போறீங்க...நம்புங்க மக்களே நான்தான் நேருவோட ஆன்மா, பரலோகத்தில் இருக்கும் பரிசுத்த ஆன்மா.'

காந்தி ஆன்மா :

`அப்பவே காங்கிரஸ் கட்சியைக் கலைக்கச்சொல்லி இருந்தேன். ஆனா இப்போ பாருங்க கட்சி இருக்கிற இடமே தெரியாத அளவுக்குக் காணாமப் போயிட்டு. இது காந்தி பூமி, காந்தி தேசமே காவல் இல்லையான்னு பாட்டெல்லாம் பாடுறீங்களே... அதுக்கு ஏற்ற மாதிரி அமைதியா, நல்ல மக்களா இருக்கீங்களா?. எனக்கு சிலை வெச்ச ஊர்ல கோட்சேவுக்கும் சிலை வைக்கப் பார்க்கிறீங்களே... இது உங்களுக்கே அடுக்குமா கோபால்ஸ்? காலங்காலமா அமைதியைச் சொல்லி வளர்த்த நம்ம ஊர்ல உள்ள மக்கள் அமைதியா போராடினாகூட தேசத் துரோகின்னு சொல்லிடுறீங்களே... ஏன் ஃப்ரெண்ட்ஸ் ஏன்....? கடைக்கு கடை சம்சா இருக்கே அஹிம்சா எங்கடா...?

அப்துல்கலாம் ஆன்மா :

காலைல எழுந்திரிச்சதில் இருந்து நைட் தூங்குறவரைக்கும் விடாம ஃபேஸ்புக்ல அப்துல்கலாம் பொன் மொழிகளா போடுறீங்களே மக்களே அதுல முக்கால்வாசி நான் எழுதுன பொன்மொழியே இல்லைன்னு உங்களுக்குத் தெரியுமா? ஃபார்வேர்ட் மெசேஜா இருந்தாலும் சரி, ஃபேஸ்புக் கமென்ட்டா இருந்தாலும் சரி எல்லாத்துலேயும் கலாம் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமான்னு எழுதுறீங்களே அதுல முக்கால்வாசி நான் சொன்னதே கிடையாதுன்னு தெரியுமா? கனவு காணுங்கள்; காதல் சந்தியாவைப் பற்றி அல்ல. கனவு இந்தியாவைப் பற்றினு மொக்கையா எழுதிட்டு கீழே அப்துல்கலாம்னு நேம் போடுறீங்களே... ஏன் ஃப்ரெண்ட்ஸ்? எல்லோரையும் கனவுதானே காணச் சொன்னேன் இப்படிக் கனவு மட்டுமே காணச் சொல்லலியே. அப்துலகலாமோட ஆன்மா சாந்தி அடையணுமா... தூங்காமப் போய் வேலையைப் பாருங்க பாஸ்.

எம்.ஜி.ஆர் ஆன்மா :

`அ.தி.மு.க. கட்சி ஆரம்பிச்சதுல இருந்து இப்போவரைக்கும் நல்லாதான் போய்கிட்டு இருந்தது. இப்பதான் கட்சிக்கு யார் தலைவர்னே தெரியாம போய்கிட்டு இருக்கு. அ.தி.மு.க. கட்சி ரெண்டா உடைஞ்சதைக்கூட ஏத்துப்பேன். ஆனா இப்போ புதுசா எம்.ஜி.ஆர். அம்மா தீபான்னு கட்சி ஆரம்பிச்சு இருக்கிறதுதான் கொஞ்சம்கூட ஏத்துக்கவே முடியலை. நான் இருந்தவரைக்கும் நல்லா இருந்த திராவிடக் கட்சி எல்லாத்தையும் இப்படி சல்லி சல்லியா உடைச்சிட்டாங்களே. இனி அ.தி.மு.க-ல இருந்து புதுசா எந்தக் கட்சி பிறக்கும்னுதான் தமிழ்நாடே தவம் கிடந்து காத்துக்கிடக்கு. மூணு மாசமா பிரேக்கிங் நியூஸை வாரி வழங்கின அ.தி.மு.க. இனியும் பிரேக்கிங் நியூஸ் கண்டிப்பா கொடுக்கும் மக்களே. அடுத்து சீக்கிரமே பிரேக்கிங் நியூஸ் பொதுக்கழகம்னு ஒண்ணு ஆரம்பிக்கணும்.

அண்ணா ஆன்மா :

`தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்கிட்ட எல்லாரோட ஆன்மாவும் பேசுற மாதிரியே இப்போ நானும் ஆன்மாவா வந்து பேசலாமுன்னு இருக்கேன் மக்களே. என்னோட பெயரைக் கட்சியில் வெச்சு இருந்தாலும் என்னோட ஆன்மாவைத் தவிர மத்த எல்லா ஆன்மாவும் வந்து அ.தி.மு.க. தலைவர்கள்கிட்ட எப்படிப் பேசுதுனுதான் தெரியவே இல்லை. அண்ணா தி.மு.க-னு பேர் வெச்சீங்களே... தினமும் தியானம் பண்ணி எப்போதாவது என் ஆன்மாவுக்கு சோறு வெச்சீங்களா? என்னதான் இருந்தாலும் அ.தி.மு.க-வுக்கும், நான் வளர்த்த தி.மு.க-வுக்கும் அடுத்த தலைவர் யாருன்னே தெரியாமா இருக்கிறதை நினைச்சாதான் மனசு மரணமா இருக்கு மக்களே. இந்த  ஆண்ட்ராய்ட் காலத்துலகூடவா ஆன்மாலாம் வந்து பேசும்னு நம்பிக்கிட்டு இருக்கீங்க மக்களே.


- லோ.சியாம் சுந்தர்Trending Articles

Sponsored