மீனவர்கள் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! முதல்வர் பழனிசாமிசேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிறைவுபெற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய நலத் திட்டங்கள் தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

Sponsored


Sponsored


மேலும், மீனவர்கள் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும்; சேலம் உருக்காலை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகச் செயல்பட பிரதமரிடமும், அந்தத் துறை அமைச்சரிடமும் வலியுறுத்தப்படும். மற்ற மாநிலங்களில் வாட் வரியை அதிகப்படுத்தியபோது, தமிழகத்தில் வாட் வரி உயர்த்தப்படவில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது.

Sponsored


ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் சரிவர கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 140 ஆண்டு காலம் இல்லாத வறட்சி நிலவிவருகிறது. உச்சநீதிமன்றத்தில் உள்ள காவிரி வழக்கில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று காத்திருக்கிறோம்' என்றார்.

- வி.கே.ரமேஷ்Trending Articles

Sponsored