இந்திய, சிங்கள அரசுகள் துரோகம் இழைக்கின்றன - திருமாவளவன் கண்டனம்இந்திய மற்றும் சிங்கள அரசுகள் தமிழர்களுக்கு  துரோகம் இழைக்கின்றன என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், 'சிங்கள மற்றும் இந்திய அரசுகள் தமிழர்களுக்கு  தொடர்ந்து துரோகம் இழைக்கின்றன. சிறிசேனா அரசு தமிழர்களுக்கு இனக்கமாக செயல்படுகிறது என்ற தோற்றம் உண்மை அல்ல.

Sponsored


தமிழர்கள் பிரச்னையில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அரசுகள் ஒரே நிலைப்பாட்டில் செயல்படுகின்றன. சிங்கள அரசின் இனவெறித் தாக்குதலை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது. உயிரிழந்த மீனவர், காயமடைந்த மீனவர்களுக்கு அதிகமான இழப்பீடு வழங்க வேண்டும்' என்றும் தெரிவித்தார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored