பா.ஜ.க-வின் அகராதியில் வேற வார்த்தையே இல்லையா பாஸ்..?



இந்தியாவில் இருக்கிற ஒவ்வொரு கட்சிக்கும் ஓர் சிறப்பம்சம் இருக்கு. சில முக்கியமான வார்த்தைகளை எப்பவுமே சில குறிப்பிட்ட கட்சிகள் மட்டும்தான் யூஸ் பண்ணுவாங்க. அந்த வார்த்தையை அவங்க மட்டும் குத்தகைக்கு எடுத்த மாதிரி தவறாம யூஸ் பண்ணிட்டு இருப்பாங்க. அந்த மாதிரி பா.ஜ.க கட்சியில் உள்ளவங்க மட்டுமே யூஸ் பண்ற சில வார்த்தைகள் இருக்கு. எல்லா பிரஸ் மீட்லேயும், டி.வி நிகழ்ச்சிகள்லேயும் மறக்காம அந்த வார்த்தையை எல்லாம் யூஸ் பண்ணிடுவாங்க. அப்படி பா.ஜ.க கட்சி யூஸ் பண்ற அந்த வார்த்தைங்க எல்லாம் எதுன்னு தெரிஞ்சிக்கணுமா......ரீட் திஸ் மக்களே.

தேச துரோகி :

Sponsored


Sponsored


தேச துரோகிதான் நம்ம பா.ஜ.க கட்சில இருக்கிற எல்லாரும் தவறாம யூஸ் பண்ற அதி முக்கியமான வார்த்தை. பா.ஜ.க கட்சியைப் பொறுத்தவரைக்கும் அவங்க கட்சிக்கு எதிரா யார்  என்ன பேசுனாலும் அவங்க எல்லாருமே தேச துரோகிதான். இப்ப புதுசா உருவாகி இருக்கிற ட்ரெண்ட்படி பார்த்தா, தமிழ்நாட்டுலதான் அதிகமான தேச துரோகிகள் இருக்கிறதா கணக்கெடுப்பு சொல்லுது மக்களே. உங்க வீட்டு அடி பைப்ல தண்ணி வரல, கடைகாரர் மீதி சில்லறைக்கு ஹால்ஸ் கொடுக்கிறது மாதிரி ஏதாவது சின்னப் பிரச்னையை எதிர்த்துப் பேசுனாகூட உடனே உங்களுக்கு தேச துரோகி பட்டம் கொடுத்துடுவாங்க. இவங்க யாருக்கு எப்போ எதுக்காக தேச துரோகி பட்டம் கொடுப்பாங்கன்னு தெரியாது. ஆனா கண்டிப்பா தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாருக்கும் ஒரு டைமாவது இந்தப் பட்டம் கொடுத்துடுவாங்க.

Sponsored


பொறுக்கி :

தேச துரோகி எப்படி ட்ரெண்ட் செட்டிங் வார்த்தையோ அதே மாதிரி பொறுக்கியும் ட்ரெண்ட் செட்டிங் வார்த்தைதான் மக்களே. பட் இந்த வார்த்தையை பா.ஜ.க கட்சியில உள்ள எல்லாரும் யூஸ் பண்ணாம அவங்க கட்சில இருக்கிற ஒரே ஒரு நபர் மட்டும்தான் யூஸ் பண்ணுவார். அவர் வேற யாரும் இல்லை, த கிரேட் ட்விட்டர் புகழ் சுப்பிரமணியன் சுவாமிதான். இவரைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாருமே பொறுக்கிகள்தான். தமிழ்நாட்டுல ஏதாவது ஒரு பிரச்னை கொதிப்பா இருக்குற டைமா பார்த்து எல்லோரையும் பொறுக்கின்னு சொல்றதுதான் இவரோட வேலை. காலங்காலமா தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாரையும் பொறுக்கின்னு சொல்றீங்களே, இந்த மாதிரி பொறுக்கி ஆக ஏதாவது வழி இருக்கா? உடனே பொறுக்கியா மாற வாட் இஸ் த ப்ரசிஜர் பாஸ்?

இது அவரின் தனிப்பட்ட கருத்து :

பா.ஜ.க கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அந்தக் கட்சியில உள்ளவங்களால அதிகமா பயன்படுத்தப்பட்ட வார்த்தை கண்டிப்பா `இது அவரின் தனிப்பட்ட கருத்தா`தான் இருக்கும். அவங்க கட்சியில இருக்கிற ஒவ்வொருத்தங்களும் மைக் கிடைச்சிட்டா போதும். உடனே வகை வகையா, ரகரகமா ஏதாவது கருத்து சொல்லிடுவாங்க. சாதாரணமா கருத்துச் சொன்னாகூட பரவாயில்லை. பட் அவங்க அப்படி சாதாரண கருத்தும் சொல்ல மாட்டாங்க. தமிழ்நாட்டுல கொஞ்சமா உயிரை கையில பிடிச்சுக்கிட்டு இருக்கிற அந்தக் கட்சியை அப்படியே குழி தோண்டி 200 அடிக்குக் கீழ புதைக்கிற அளவுக்குதான் பேசுவாங்க. பட் கடைசியில பாவமா அவங்க கட்சியிலேயே இருக்கிற வேற யாராவது ஒருத்தங்க அதுக்கு மறுப்பும் தெரிவிக்க முடியாம, அதை ஏத்துக்கவும் முடியாம கடைசியா இது அவரின் தனிப்பட்ட கருத்துன்னு சொல்லி எஸ்கேப் ஆகிடுவாங்க. அப்படி சொன்னா மட்டும் விட்டுடுவோமா? 

தாமரை மலரும் :

தமிழ்நாட்டுல ரொம்ப காலமா, எல்லா சீசன்லயும் மலரலாம்னு வெயிட்டிங்ல இருக்குற ஒரே மலர் தாமரையாத்தான் இருக்கும். அவங்க கட்சியில இருக்கிற எல்லாருமே எப்போதும் விடாமச் சொல்ற விடாது கருப்பு விஷயம் `தாமரை மலரும்`. காத்திருந்து காத்திருந்து தாமரை வாடுதடின்னு சொல்ற ரேஞ்சுக்கு ரொம்பகாலமா தாமரை மலரும்னு சொல்லிக் காத்துக்கிட்டே இருக்காங்க பா.ஜ.க கட்சிக்காரங்க. பேசாம மலரும் தாமரைன்னு ஒரு படம் வேணா எடுங்களேன் பாய்ஸ்... படத்துலயாவது மலருதான்னு பார்ப்போம். நாங்களும் தாமரை மலரட்டும்னுதான் காத்துக்கிட்டு இருக்கோம்.

மித்ரோன் :

மித்ரோன் அப்படின்னா ஹமாரே இந்தியில `நண்பர்கள்`ன்னு அர்த்தம். ஆனா பிரதமர் மோடி எப்போ அந்த வார்த்தையை மேடைகள்ல சொல்ல ஆரம்பிச்சாரோ அப்பவே அது இந்தியாவின் மிகப்பெரிய காமெடி வார்த்தையா ஆகிட்டு. ஒவ்வொரு தடவையும் மேடையில மக்களைப் பார்த்து 150 டெசிபல்ல சவுண்டா மித்ரோன்னு கத்துறதுதான் அவரோட பாரம்பரியம் ஆஃப் பழக்க வழக்கம். ஆனா பாவம் மீம்ஸ் போட நல்ல வார்த்தை கிடைக்காம இருந்த நம்ம பசங்க இப்ப இந்த மித்ரோன் வார்த்தையைப் பிடிச்சிக்கிட்டு கலர்கலரா காமெடிப் பண்ணிட்டு இருக்காங்க. தமிழ்நாட்டுல இருக்கிற இந்தியே தெரியாத ஆட்கள்கூட இப்ப மித்ரோன், மித்ரோன்னு சொல்லி மரணமா கலாய்ச்சுக்கிட்டு இருக்காங்க. சொல்லுங்க மித்ரோன்னா 'நாடோடிகள்' படத்துல வர்ற மாதிரி ஃப்ரெண்ட்ஸ்தானே, நாடோடிகள்னா ஊர், உலகம் எல்லாம் சுத்துறதுதானே. அப்போ அது நீங்கதானே.

பாகிஸ்தான் போங்க :

தேச துரோகி வார்த்தைக்கு இணையான வார்த்தைதான் பாகிஸ்தானுக்கு போங்கன்னு சொல்றதும். தமிழ்நாட்டுல மட்டும் இல்லாம இந்தியாவில இருக்கிற எல்லாரையும் கொஞ்சம் கொஞ்சமா பாகிஸ்தானுக்கு அனுப்பி அவங்களோட மக்கள் தொகையை வேகமா அதிகரிக்க வைக்கிறதுதான் பா.ஜ.க கட்சியோட மாஸ்டர் பிளான்னு எத்தனைப் பேருக்குத் தெரியும். அதுக்காகவே பா.ஜ.க கட்சியைப் பிடிக்காதவங்க எல்லாரையும் கண்டிப்பா பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடுற தீவிர வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. பட் இதைப் பயன்படுத்தி சிலர் பா.ஜ.க. கட்சியை எதிர்த்துப் பேசி அப்படியே பாகிஸ்தானுக்கு டூர் போகலாம்னுகூட நினைச்சுக்கிட்டு இருக்காங்க. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா இந்தியாவில உள்ளவங்களைப் பாகிஸ்தான் அனுப்புறதுக்குப் பதிலா மொத்தமா இந்தியாவையே பாகிஸ்தானோட இணைச்சிட்டா நல்லா இருக்கும்ல பாஸ். இதைச் சொன்னா...!

-லோ.சியாம் சுந்தர்



Trending Articles

Sponsored