சசிகலா, பன்னீர்செல்வம், தீபா, தீபக் - யாரு அடுத்த வாரிசுன்னு தெரிஞ்சுக்க இதைப் படிங்க!Sponsoredநாங்கதான்ப்பு உண்மையான அ.தி.மு.க, நாங்கதான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுனு ஆளாளுக்குக் கிளம்பிருக்காங்க. போறபோக்கை பார்த்தா தெருவுக்கு ரெண்டுபேர் இந்த மாதிரி கிளம்புனாலும் கிளம்புவாங்களோன்னு தோணுது. சரி  இப்ப அப்படி சொல்றவங்கள்ல யார்கிட்டதான் அ.தி.மு.கவோட வாரிசு ஆக... அதாவது ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஆகுறதுக்கான அம்சங்கள் இருக்குதுனு பார்க்கலாமா மக்களே..

ஜெயலலிதாவோட 30வருசத்துக்கும் மேலாக கூடவே இருந்தது நாங்கதான். மதியம் சாப்பிடுறதுக்கு என்ன வேணும்ங்கிறதுல தொடங்கி மாதத்துக்கு எத்தனை நாட்கள்னு அவருக்கு ஜி.கே சொல்லிக்குடுத்து வளர்த்தது வரைக்கும் எல்லாமே நாங்கதான், அதனால நாங்கதான் வாரிசுன்னு சொல்லுது சசிகலா க்ரூப். மெஜாரிட்டியும் எங்களுத்தான் இருக்குது பாத்தீங்கள்ல..ங்கிறதையும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா வேற சொல்லிட்டு இருக்காங்க. ஆனா ஜெயலலிதாவைப் பொறுத்தவரை யாரையுமே வலுக்கட்டாயமா எல்லாம் தனக்கு சப்போர்ட் பண்ணணும்னு சொல்லிக்கிட்டதாவே தெரியலை. அதாவது சசிகலா பாணியில சொல்லணும்னா தாமாக முன்வந்து வலியுறுத்துங்கனு சொன்னதே இல்லை. போக, கட்சியில இருந்து  ஒருத்தர் ஜம்ப் ஆகப்போற தகவல் வந்துட்டாலே உங்க தயவெல்லாம் தேவையே இல்லைன்னு  அதுக்கு முன்னாடியே கட்சியில இருந்தே அதிரடியா தூக்குற அதிரடி ஆளான ஜெயலலிதாவோட வாரிசாக, ஆட்சிக்காக கூவத்தூர்ல அம்புட்டுப்பேரையும் மறைச்சு வச்சு சப்போர்ட் வாங்குற சசிகலாவை  எப்படி மக்கள் ஏத்துப்பாங்கனுதான் சத்தியமா தெரியலை.

Sponsored


Sponsored


இந்தப்பக்கம் ஓ.பி.எஸ்ஸும் நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க னு சொல்லிக்கிட்டு, ஊர்ல  இருக்குற பெரிய சேனல்ல இருந்து இன்னும் பேரே வைக்கப்படாத டெஸ்ட் ட்ரான்ஸ்மிஸன் சானல் வரைக்கும் ஒண்ணுவிடாம பேட்டி குடுத்துட்டு இருக்குறார். அப்படியே இங்கிட்டு ஜெயலலிதாவை எடுத்துக்கிட்டீங்கன்னா பத்திரிகையாளர்கள் சந்திப்புன்னாவே 'நோ' சொல்லுவார்.  அதுவும் ஓ.பி.எஸ்ஸை பாத்தீங்கன்னா பேட்டிகளிலெல்லாம் சத்தமாகவும், தெளிவாகவும் பேசுறார்.  அது மட்டுமில்லாம இப்பலாம்  அ.தி.மு.கவுக்குன்னே பேடேன்ட் ரைட்ஸ் வாங்கி வச்சிருக்குற, அந்த  எப்போதும் குனிஞ்சபடியே இருக்குற பொசிஷனை அவர்கிட்ட பார்க்க முடியலை. ஆக மொதல்ல பேசுறார், அதுவும் பத்திரிகையாளர்கள்கிட்ட பேசுறார், தெளிவாக வேற பேசுறார், கொஞ்சம்கூட குனியவே இல்லை. ஆக ஒரு அ.தி.மு.க கட்சிக்காரருக்கான குறைந்தபட்ச  எந்த அடையாளமுமே இல்லாது மாறிப்போய் இருக்கின்ற ஓ.பி.எஸ் எப்படி அ.தி.மு.கவை சொந்தம் கொண்டாடுறாரு, மக்களும் எப்படித்தான் நம்புவாங்கன்னும் புரியவே இல்லை மக்களே..

இதுக்கு இடையில  தீபக்கைக்கூட ஜெயலலிதாவோட வாரிசாக அறிவிக்கணும்னு ஒரு க்ரூப் கிளம்பப்போகுதுன்னு பத்து பேர்கொண்ட வாட்ஸ் அப் குழுவுல பேச்சு அடிபடுதாம். என்னது தீபக்கா.. இது என்னடா அ.தி.மு.கவுக்கு வந்த சோதனைனு நினைச்சுக்கிட்டே அப்படியே வரலாறுகளைப் புரட்டிப்பாத்தா... நடராஜன் க்ரூப்பையே உங்க ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டும்  வேணாம் உங்க லைக் கமென்டும் வேணாம்னு பக்கத்திலேயே அண்டவிடாமல் மொத்தமாக  துரத்திவிட்டவர் ஜெயலலிதா. ஆனா தீபக்கைப் பார்த்தீங்கன்னா திடீர்னு அவங்களையே ஏத்துக்குறேன்றாரு, அப்புறம் அவங்க தலைமையை ஏத்துக்குறேன்றாரு, அப்புறம், இல்ல அவங்களை மட்டும் ஏத்துக்குறேன், இல்லல்ல அவங்களை வேணா ஏத்துக்குறேன் அவங்க தலைமையைலாம் ஏத்துக்க முடியாதுனு இப்படி மாத்திமாத்தி பேசிட்டு இருக்குறாரு. அப்புறம் எப்படி...?. போதாததுக்கு தீபக்னா யாருன்னே தெரியாதுன்னு சொல்லி, இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் தம்பிதுரை வாங்கிட்டுப்போயிட்டாரு. கெரகத்த..

லிஸ்ட்ல அடுத்து யாருன்னு உங்களுக்குலாம் சொல்லவே வேணாம்னு நினைக்குறேன். ஆங்க்.. தீபாவேதான். உருவத்துல கொஞ்சம் ஜெயலலிதா மாதிரியே இருக்குறார்னு வேணா வச்சுக்கலாம். ஆனா கொஞ்சநாளைக்கு முன்னாடி பேரவைனு ஒண்ணு ஆரம்பிச்சாங்க பாருங்க, அஸ்ட்ராலஜிக்காக அப்படி வைச்சாங்களா இல்ல அவசரத்துல அப்படி வைச்சாங்களா, இல்ல 11பேர் கொண்ட குழுவை வச்சு அந்தப் பேரவைக்கு  'எம்.ஜி.ஆர்- அம்மா- தீபா' பேரவை ங்கிற அப்படினு ஒரு பேரை  வைச்சாங்களானு சத்தியமா தெரியலை. தமிழ்நாடு மட்டுமில்ல இந்தியா மட்டுமில்ல உலகமே சிரிப்பா சிரிச்சிக்கிட்டு இருக்குது. இங்கிட்டு ஜெயலலிதாவை எடுத்துக்கிட்டீங்கன்னா  மக்கள் நலத்திட்டங்களுக்கு பெயர் வைச்சதை விட விலங்குகளுக்குப் பெயர் வச்சதுதான் அதிகம். அதுலயும் வெள்ளைப்புலிகளுக்கு அர்ஜுனா, காவேரி, சித்ரா, ஆர்திரேயா னும் சாதா புலிகளுக்கு  நேத்ரா, வித்யா, சித்தா னும் வெரைட்டி வெரைட்டியா அவங்க வைச்ச பெயர் பட்டியல் பெருசு. ஆக புலிகளுக்கே இவ்வளவு கவித்துவமா, தனித்துவமா, புதுத்துவமா அப்புறம் என்னது...? சரி, என்னமோ ஒரு 'த்துவமாக' எல்லாம் பேர் வச்ச ஜெயலலிதாவோட அரசியல் வாரிசாக, தான் ஆரம்பிச்ச ஒரு பேரவைக்கே பொருத்தமா ஒரு பேரை வைக்கத் தெரியாத தீபாவை எல்லாம்  எப்படிங்க வாரிசாக ஏத்துப்பாங்க. அதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா..? ஆங்க்..

- ஜெ.வி.பிரவீன்குமார்Trending Articles

Sponsored