பாஜக வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது! திருமாவளவன்உத்தரபிரதேசம் உள்ளிட்ட தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,' பாஜக வெற்றி பெற்றிருப்பதை வைத்து பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று கருத முடியாது. அனைத்து தரப்பு மக்களும் பாஜக ஏற்றுக் கொண்டதாகவும் கருத முடியாது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சேர்ந்து ஆலோசனை செய்து முடிவு எடுப்போம். இடைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் எண்ணத்தில் உள்ளது' என்றும் தெரிவித்தார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored