ஆர்.கே.நகரில் ஏலியன் விசிட்!Sponsoredஒரே வெள்ளையும், சொள்ளையுமாக இருக்குறதைப் பாத்து, நாம தேடி வந்த பனிப்பிரதேசம் இதுதான்னு தப்பா நினைச்சு இறங்கிடுறார் ஏலியன். வந்த பிறகுதான் தெரியுது அது இடைத்தேர்தலுக்காக பிரசாரத்துல பிஸியாக இருக்குற ஆர்.கே நகர் ஏரியான்னு. இனி அவர் படுற பாடுகள்தான் கதை..

வந்து இறங்கியவருக்கு முதலில் தட்டுப்பட்டது ஓ.பி.எஸ்ஸின் பிரசார மேடை. ஊரே ஓ.பி.எஸ் பேச்சுக்காக காத்திருக்க அவரோ ஆழ்ந்த தியானத்தில் (!) மூழ்கியிருக்கிறார். தொண்டர்கள் எல்லாம் காத்துட்டு இருக்காங்க இவரு ஏன் தூங்கிட்டு இருக்குறார்னு இப்படி தூங்குனா எப்படி ஜெயிப்பார்னு நினைச்சுக்கிட்டே பிரசாரத்தைக் கவனிக்கிறார் ஏலியன். மாண்புமிகு  தங்கத்தாரகை.. இதயதெய்வம்.. புரட்சித்தலைவி.. பொன்மனச்செல்வி.. அம்மாவின் ஆணைக்கிணங்க.. என லென்த்தாக வந்தவர்கள் எல்லோரும் பேசுவதைப் பார்த்து இந்த ஊருல ஏன் 1.5 ஃபீட்டுக்கு பேர் வச்சிருக்காங்கன்னு ஆச்சரியத்தோட பார்க்கிறார். கழகத்தின் பொருளாளர் ஓ.பி.எஸ் அவர்களே.. அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களே.. னு ஆரம்பிச்சு லாஸ்ட்டா  ஆகவே அம்மாவின் ஆட்சி மீண்டும் தொடர எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை..ங்கிற கோஷத்தோட பிரசாரம் முடிந்து, ஓபிஎஸ் தியான நிலையில் மறுபடி ஆழ்ந்துவிட அங்கிருந்து அப்படியே எஸ்கேப் ஆகும் ஏலியன்,  இந்தப்பக்கம் எடப்பாடி பழனிசாமி க்ரூப்பின் பிரசாரத்தில் எக்குத்தப்பாக  மாட்டிக்கொள்கிறார்.

Sponsored


அவர்களும் அதே மாண்புமிகு தங்கத்தாரகையில் ஆரம்பித்து பிரசாரத்தைத்தொடங்கி கழகத்தின் அவைத்தலைவர் செங்கோட்டையன் அவர்களே.. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களே.. ன்னு ஆரம்பித்து ஆகவே அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய எங்களுக்கு வாக்களிக்கவும் என பிரசாரம் முடிகிறது. முன்னாடி பேசுனவங்க வேற ஆட்கள் பேரைச் சொன்னாங்க இது வேறயா இருக்குதே.. ஒரே கழகத்துக்கு எப்படி ரெண்டு ரெண்டுபேர் தலைவராக இருக்க முடியும், விசித்திரமான  நாடாவுல்ல இருக்குன்னு  ஏலியனுக்கே நாக்குத்தள்ளிவிடுகிறது. சோடாவைக்குடித்து ஃபார்முக்கு திரும்பும் ஏலியன் குண்டாங்குலையாக தீபா கோஷ்டியின் பிரசாரத்தில் சிக்குகிறார்.

Sponsored


'அம்மாவின் ஆட்சி மீண்டும் தொடர எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவைக்கு வாக்களியுங்கள் மக்களே.. ' என தொண்டர்கள் வளையவருகிறார்கள். பேரவையின் கொடியில் இருக்கும் எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் வயசானவர் மாதிரி இருக்குறாரு. ஆனா, இவங்க எம்.ஜி.ஆர் அம்மானு சொல்லுற தீபாவைப்பாத்தா சின்னப்பொண்ணுமாதிரி இருக்காங்களே எப்படி.. என மறுபடியும் மண்டை குழம்பிப்போய் மீதி சோடாவையும் குடித்து இயல்பு நிலைக்குத் திரும்புகிறார் ஏலியன். ஓபிஎஸ்ஸுனு ஒருத்தர் வந்தாரு அம்மா ஆட்சி வேணும்னாரு, பழனிசாமினு ஒருத்தர் வந்தாரு அம்மா ஆட்சி வேணும்னாரு, இப்போ இவங்களும் வந்து அம்மா ஆட்சி வேணும்னு சொல்லுறாங்க. மூணுபேருமே ஒரே ஆட்சியைத்தான் கேக்குறாங்கன்னா  அப்புறம் எதுக்கு தனித்தனியா மைக் போட்டு லைட் எல்லாம் கட்டி  கத்திட்டு இருக்குறாங்கனு யோசிச்சிட்டு இருக்கும்போதே தூரத்தில் ஒருத்தர் சேரைத் தூக்கி தொண்டர்களின் நடு மண்டையிலேயே எறிந்துகொண்டிருக்க அட இது செம மேட்டராக இருக்குதேன்னு  அந்தப்பக்கமாக போயி குத்தவைக்கிறார். வேற என்னது, விஜயகாந்தோட பிரசாரம்தான்.

'இடைத்தேர்தல் என்றாலே இம்சை' என பேச்சினை ஆரம்பித்து வண்டியை வாய்க்காலில் விடுகிறார் விஜயகாந்த். இவ்வளவு நேரம் பேசுனவங்களாம் ஒரு லாங்க்வேஜை பேசுனாங்க ஆனா இவரு மட்டும் தனியா வேற ஒரு லாங்க்வேஜ் பேசுறாரே இவரும் நம்மளை மாதிரி வேற்றுகிரகவாசி போல என நினைத்தவர், ஹ்ம்ம்..  இருந்தாலும் இந்த நாட்டில் வந்து இப்படி டஃப் குடுக்குறாரே என ஒரு சக ஏலியனாக ஃபீலிங் பிரெளடு ஆகிறார். பிரசாரத்துக்கு நடுவே வழக்கம்போல பழக்கதோசத்தில் ஆகவே மக்களே உங்களின் பொன்னான வாக்குகளை அ.தி.மு.கவுக்கு அளிக்குமாறு ரொம்ப தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என உளற, அவங்க கேட்டதுலலாம் ஒரு லாஜிக் இருந்துச்சு. ஆனா  இவரும் எதுக்கு அ.தி.மு.க வுக்கு ஓட்டு கேக்குறாரு ஆத்தீ.. என பதறி ஓடுகிறார். அடுத்த தெருவில் ஸ்டாலின்  பாதி கிழிந்த சட்டையுடன் 'ஆக,  ஆகையினால்தான் தி.மு.கவுக்கு வாக்களிக்கசொல்கிறோம் என்பதை'.. என பிரசாரம் செய்ய, பக்கத்தில் 'தாமரை மலரும்.. தாமரை மலரும்.. என தமிழிசை பாட்டாகவே பாடிக்கொண்டிருக்கிறார்.  தாமரைனா மலரத்தானே செய்யும் அதை எதுக்கு இங்க வந்து சொல்லிட்டு இருக்குறாங்க, சரி ஏதோ பூ விக்கிறவங்க போல.. என கண்டும் காணாமல் அங்கிருந்து எஸ்கேப் ஆன நேரத்தில் அடுத்து யாரோ சிலபேர்  பிரசாரத்துக்கு செட் போட அங்கே  வர, ஆத்தி.. என  அந்த ஏரியாவை விட்டே தெறித்து ஓடுகிறார் ஏலியன்..


- ஜெ.வி.பிரவீன்குமார்Trending Articles

Sponsored