துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடா ? மறுக்கும் அமைச்சர் கே.பி.அன்பழகன்அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், தற்போதைய துணைவேந்தர் ராஜாராமிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 50 கோடி ரூபாய் கேட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டினார்.

Sponsored


இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், 'அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. துணைவேந்தர் தேர்வுக்குழு மூன்று பேரைத் தேர்வு செய்யும். அதில் ஒருவரை ஆளுநர் தேர்ந்தெடுப்பார்' என்று தெரிவித்தார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored