நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரிக்கர் வெற்றி!Sponsoredகோவா சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பா.ஜ.க-வின் மனோகர் பாரிக்கர் 22 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாரிக்கருக்கு எதிராக வாக்களித்தனர். மேலும், ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ வாக்கெடுப்பைப் புறக்கணித்தார்.

கோவா மாநிலத்துக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க 13 தொகுதிகளிலும் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. இருப்பினும், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆளுநர் அழைப்பு விடுத்தையடுத்து, மனோகர் பாரிக்கர் இரு தினங்களுக்கு முன்னர் முதல்வராகப் பதவியேற்றார். இதற்கிடையில், மனோகர் பாரிக்கர் முதல்வராகப் பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், பாரிக்கர் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Sponsored


இன்று, கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 40 தொகுதிகள்கொண்ட கோவாவில், ஆட்சியமைக்க 21 எம்எல்ஏ -க்களின் ஆதரவைப் பெற வேண்டும். பா.ஜ.க-வின் 13 எம்எல்ஏ-க்கள், மஹாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியின் 3 எம்எல்ஏ-க்கள், கோவா மக்கள் முன்னணியின் 3 எம்.எல்.ஏ-க்கள் 3 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் உட்பட 22 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளார். இதனையடுத்து, மனோகர் பாரிக்கர் கோவாவின் முதல்வராகத் தொடர்வது உறுதியாகியுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored