பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளை நிராகரிக்க, தேர்தல் ஆணையத்தில் தம்பிதுரை கோரிக்கை!Sponsoredஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்ததாக, மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை, தம்பிதுரை தலைமையில் சசிகலா ஆதரவு அ.தி.மு.க எம்பி-க்கள் மற்றும் நான்கு அமைச்சர்கள் உட்பட 20 பேர் நேரில் சந்தித்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, 'கட்சி விதிகளின்படிதான் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க--வில் எந்தப் பிளவும் இல்லை. இரட்டை இலையை முடக்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ யாருக்கும் உரிமை இல்லை.

Sponsored


ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் வரும் நேரத்தில், சின்னம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்தோம். விரைவில் அனைத்து உறுப்பினர்களும் வாக்களிக்கும் வகையில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த உள்ளோம்' என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored