மரணமடைந்த பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு தமிழக அரசு ஐந்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியதுSponsoredபிரிட்ஜோவின் குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாயும் காயமடைந்த சரோனின் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாயும் நிவாரணநிதியாக தமிழக அரசு வழங்கியுள்ளது. 
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர் பிரிட்ஜோவை மார்ச் 6-ம் தேதி இலங்கைக் கடற்படையினர் சுட்டுக்கொன்றனர். அப்போது உடனிருந்த சரோன் என்பவரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். இதனைக் கண்டித்து தமிழக மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாயும், காயமடைந்த சரோனின் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாயும் நிவாரணத் தொகையாக அறிவித்தது. இன்று தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன், பிரிட்ஜோவின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலையை அளித்தார். அதேபோல் காயமடைந்த சரோனின் குடும்பத்துக்கும் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை அளித்தார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored