'இரட்டை இலையை முடக்க முயலவில்லை!'Sponsored'அ.தி.மு.க-வின் சின்னமான இரட்டை இலையை முடக்க பா.ஜ.க முயற்சி செய்யவில்லை' என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் சசிகலா தரப்பினருக்கா அல்லது ஓ.பன்னீர் செல்வம் தரப்பினருக்கா என்பது தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இரட்டை இலையை முடக்க பா.ஜ.க முயற்சி செய்வதாகவும், ஓ.பன்னீர் செல்வத்தைத் தூண்டிவிடுவதாகவும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன்,'இரட்டை இலையை முடக்க பா.ஜ.க முயலவில்லை. பா.ஜ.க-வைப் பார்த்து அ.தி.மு.க பயப்படுகிறது. விவசாயிகள் பிரச்னையில் மத்திய அரசு உரிய உதவிகளைச் செய்துவருகிறது. மாநில அரசு, விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவில்லை. இந்த  ஆண்டின் பட்ஜெட்டில்கூட விவசாயிகளுக்குத் தேவையான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. மாநில அரசு நிர்வாகரீதியில் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், தமிழகம் உலக அளவில் முக்கிய இடத்தைப் பெறும். எல்லா வளர்ச்சித் திட்டங்களையம் எதிர்த்தால், தமிழகம் முன்னேறாது' என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored