ஆர்.கே.நகர் சி.பி.எம் வேட்பாளர் லோகநாதன் வேட்புமனு தாக்கல்!Sponsoredஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லோகநாதன், வேட்புமனு தாக்கல்செய்தார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், அ.தி.மு.க சசிகலா அணியில் டி.டி.வி தினகரன், பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன், தி.மு.க-வில் மருது கணேஷ், தே.மு.தி.க-வில் மதிவாணன், பா.ஜ.க-வில் கங்கை அமரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடப் போவதாகக் கூறிவருகிறார். இது தவிர, பல்வேறு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

Sponsored


ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் தற்போது வேட்புமனு தாக்கல்செய்துள்ளார்.  ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிடம், அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Sponsored
Trending Articles

Sponsored