ஆர்.கே.நகரில், எங்கள் அணிக்கு தீபா பேரவை நிர்வாகிகள் ஆதரவு! சொல்கிறார் மாஃபா. பாண்டியராஜன்Sponsoredதீபாவின், 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா' பேரவையில் இருந்து ஏராளமானோர் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளித்துள்ளதாக மாஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் அணியின் மாஃபா. பாண்டியராஜன், 'ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனன் நாளை வேட்புமனு தாக்கல்செய்ய உள்ளார். நாளை காலை 9.30 மணிக்கு ஈஸ்வரன் கோயிலில் இருந்து பேரணியாகச் சென்று வேட்புமனு தாக்கல்செய்ய உள்ளோம். தீபா பேரவையில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களின் உதவியுடன், இணைந்து ஆர்.கே.நகரில் பணி செய்வோம்.

Sponsored


கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள், தற்போதுள்ள எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் என அனைவரும் ஆர்.கே.நகரில் வெற்றிப் பணியில் ஈடுபடுவோம். தேர்தல் ஆணையத்திடம் எங்களது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்று, இரட்டை இலைச் சின்னத்தை எங்கள் அணிக்குத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

Sponsored


ஆர்.கே.நகர் வேட்பாளர் கூட்டம், வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது. விரைவில் ஆர்.கே.நகர் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். நாங்கள், தீபாவுக்கு எதிரானவர்கள் அல்ல. நாங்கள் தற்போதும் அவர் மீது அன்பு வைத்துள்ளோம். அவர் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆர்.கே.நகர் தொகுதியில், மதுசூதனன் நன்கு பரிச்சயமானவர் என்பதால், நாங்கள் வெற்றிபெறுவோம்' என்றார்.Trending Articles

Sponsored