"இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் இல்லை" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு! #TWOLEAVES #AIADMKSponsoredரட்டை இலைச் சின்னத்துக்காக ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே பெரும் போராட்டம் நடந்து வந்தது. இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 'இரட்டை இலை' சின்னம் யாருக்கும் கிடையாது என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அ.தி.மு.க.வின் சட்ட விதிகளின் படி, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. சசிகலா குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, அதற்கான தண்டனையையும் பெற்று வருபவர். எனவே நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வரும் ஒருவர், அரசியல் நடவடிக்கைகளில் எப்படி ஈடுபட முடியும்? இதுகுறித்து சட்ட ஆணையம் ஏற்கெனவே, தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து வந்தது. தேர்தலில் போட்டியிடக்கூட தகுதியில்லாத சசிகலா, எப்படி தேர்தல் வேட்பாளரை அறிவிக்க முடியும்? என்று பன்னீர்செல்வம் தரப்பினர் வாதத்தை முன் வைத்தனர். அதற்கு சசிகலா தரப்பினரோ 'எங்கள் வேட்பாளரை சசிகலா தேர்வு செய்யவில்லை. அ.தி.மு.க.வின் ஆட்சிமன்றக் குழுதான் தேர்வு செய்தது.' என்று மறுவாதம் செய்தனர். 

Sponsored


இந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஆர்.கே நகர் தேர்தலில் 'இரட்டை இலை' சின்னம் யாருக்கும் கிடையாது என்றும், கட்சியின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப்பின், இரண்டாவது முறையாக 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored