தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!



Sponsored



தே.மு.தி.க. கட்சியின் தலைவர் விஜயகாந்த், மியாட் மருத்துவமனையில் சற்றுமுன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். ''வழக்கமான மருத்துவ பரிசோதனைதான், பயப்படுமபடியாக எதுவும் இல்லை; யாரும் பயப்பட வேண்டாம்'' என்று அக்கட்சியின் தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தே.மு.தி.க. கட்சி தலைவர் விஜயகாந்த், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ பரிசோதனைக்கு செல்வது வழக்கம். அதுபோல இந்த வருடமும், மருத்துவ பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனையில் தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ''இதனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என யாரும் பயப்படத் தேவை இல்லை; மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு, இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்'' என்று தே.மு.தி.க. கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored