ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு தீபா முக்கிய வேண்டுகோள்!ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் செயலாளர் தீபா, இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள்'' என்று தெரிவித்தார் தீபா.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து,  ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாளாக இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆர்.கே.நகரில் நிற்கும் மதுசூதனன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். சசிகலா அணியின் சார்பில் டி.டி.வி.தினகரனும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர்களைத் தொடர்ந்து தீபாவும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

வேட்பு மனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தீபா, 'வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு மூன்று சின்னங்களில் ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள்' என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வரும் முதல் தேர்தல் என்பதாலும், தி.மு.க-வைப் பொறுத்தவரையில் செயல்தலைவராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதாலும் இந்தத் தேர்தல், தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. 

Sponsored


படம் : வி.ஸ்ரீனிவாசலு

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored