தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டத்தை சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனியாக புதிய அணியைத் துவக்கினார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பேரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பழனிசாமி, பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு தொடர்கிறது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பின் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடராகும். நிதியமைச்சராக ஜெயக்குமார் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்தக் கூட்டத்தொடர் மொத்தம் ஆறு நாள்கள் நடைபெற்றது. கூட்டத் தொடரின்போது சபாநாயகர் தனபாலுக்கு எதிராக தி.மு.க, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இருப்பினும் அந்தத் தீர்மானம் வெற்றி பெறவில்லை. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று முடிவடைந்தது. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டத்தை சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored