'ஆர்.கே.நகரில் வீடு எடுத்து தங்குவேன்''ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அங்கேயே வீடு எடுத்து தங்கியிருந்து மக்களுக்கு சேவை செய்வேன்' என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவரது தொகுதியான ஆர்.கே.நகருக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

Sponsored


அதில் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், அ.இ.அ.தி.மு.க அம்மா கட்சியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன், அ.இ.அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா கட்சியின் வேட்பாளர் மதுசூதனன், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் வேட்பாளர் தீபா, பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டவர்களது வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Sponsored


வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், அங்கேயே வீடு எடுத்து தங்கி மக்களுக்கு சேவை செய்வேன். 1996-ம் ஆண்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக என் மீது வழக்குகள் போடப்பட்டன. நான் 1999-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்போது தற்போது நிலுவையில் உள்ள அதே வழக்குகள் என் மீது இருந்தன. நான் சட்டப்படி தான் தேர்தலில் நிற்கிறேன். ஆனால் தி.மு.கவும், பன்னீர் செல்வம் அணியினரும் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியதைப் போல என்னையும் இடைத்தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்க முயற்சித்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களின் ஆதரவு உள்ளது. நான் வெற்றி பெறுவேன்' என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored