'30 லட்சம் லாரிகள் ஓடாது..!' போராட்டத்தில் குதிக்கும் லாரி உரிமையாளர்கள்



                      

த்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தென் மாநில லாரிகள் உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதனால் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 30 லட்சம் லாரிகள் ஓடாது என்றும் அதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Sponsored


இது தொடர்பாக நம்மிடம் தொடர்புகொண்டு பேசிய குமாரசாமி, "வரும் 30-ம் தேதி முதல் தென் இந்திய மாநிலங்களின் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். 3-ம் நபர் காப்பீடு என்பதை 58% உயர்த்தி இருக்கிறார்கள். இது மத்திய அரசால் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஐ.ஆர்.டி.ஏ. என்ற அமைப்பால் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காப்பீடு முழுக்க அந்த புதிய அமைப்பால் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்கிறார்கள் அதிகாரிகள். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. ஆயில் நிறுவனங்கள் அவர்களே விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று பொய்யைக் கூறி மத்திய அரசு ஏமாற்றியதோ அது போலத்தான் இதுவும். பிரைவேட் காப்பீடு நிறுவனங்கள் இந்திய அளவில் இயங்குகின்றன. அவற்றுக்கு ஆதரவாக மத்திய அரசு 58% காப்பீடு உயர்வை அறிவித்துள்ளது. 

Sponsored


இந்தியா முழுக்க 80 விழுக்காட்டிற்கு மேல் காப்பீடு செய்தே லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனியார் காப்பீடு நிறுவனங்கள் வரும் 30 விழுக்காட்டிற்கும் குறைவாகவே காப்பீடு தொகை செலுத்தப்பட்டு வருகிறது என்று கூறி மத்திய அரசுக்கு தவறான தகவலை கொடுத்துள்ளன. அதையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நாங்கள் ஐ.ஆர்.டி.ஏ. அதிகாரிகளுடன் நேரில் சந்தித்துப் பேசினோம். காப்பீடு குறித்து நீங்களே லாரிகளின் ஆவணங்களை சரிபாருங்கள் என்று முறையிட்டோம். அவர்களும் சோதித்தார்கள். சோதனைக்கு எடுத்துக்கொண்ட 50 லாரிகளின் ஆவணங்களில் வெறும் 5 லாரிகளுக்குத்தான் காப்பீடு போடாமல் இருந்தது. அதனால் எங்களின் முறையீட்டை ஐ.ஆர்.டி.ஏ. புரிந்துகொண்டது. ஆனாலும் நிலைமை அப்படியே தான்  இருக்கிறது. 58 விழுக்காடு 3-ம் நபர் காப்பீட்டை உயர்த்திவிட்டது மத்திய அரசு. எனவே அதனைத் திரும்பப் பெறவேண்டும் என்கிறோம்.

Sponsored


அதே போல, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டணங்களை ஏகத்துக்கும் உயர்த்தியுள்ளது. நாள் கணக்கில் பணம் கட்டணமாக வசூலிக்கிறார்கள். அதை முறைப்படுத்தவேண்டும். மேலும், சுங்கச் சாவடிகளில் அக்ரிமென்ட் முடிந்தும் கட்டணம் வசூலித்துக் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். இது ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது. இதைத் தடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.

                 

15 ஆண்டுகள் லாரிகள் ஓடியிருந்தால் அதை உடைத்து அழிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இந்தியாவில் இன்றைய தேதிக்கு சுமார் 95 லட்சம் லாரிகள் உள்ளன. அவற்றை அழித்தால் எவ்வளவு சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படும் என்பதைப் பற்றி மத்திய அரசு கவலை கொள்ளவில்லை. அதே நேரத்தில் அழிக்கப்படும் லாரிகளை ஈடாக உற்பத்தி செய்யப்படும் புதிய லாரிகளை வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் அதிகாரிகள் யோசனை கூறுகிறார்கள். உண்மையில் இந்தியாவில் உள்ள தனியார் லாரி தயாரிக்கும் நிறுவனங்கள், ஆண்டுக்கு இரண்டரை லட்சம் லாரிகள் மட்டுமே உருவாக்கும் திறன் படைத்தவையாக இருக்கின்றன. ஒரே நேரத்தில் சுமார் 40 லட்சம் பழைய லாரிகளை அழித்தால் அதனை ஈடுசெய்ய எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்.அந்த நேரத்தில் லாரிகள் கொள்ளை விலைக்கு விற்கும் நிலைமை ஏற்படும். எங்களை முழுமையாகச் சுரண்டப்படும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.

தமிழக அரசு பெட்ரோல் டீசலுக்கு வாட் வரியை ஏற்றியுள்ளது. இது சாதாரண டூவீலர் வைத்திருப்பவர்கள் வரை எல்லோரையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வலியுறுத்திதான் நாங்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்." என்றார் கொந்தளிப்பாக.

- சி.தேவராஜன்      



Trending Articles

Sponsored