டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு, புதுச்சேரி முதல்வர் நேரில் ஆதரவுடெல்லி, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் தி.மு.க எம்பி., டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

வறட்சி நிவாரணம் வழங்குதல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வங்கிக் கடன்களைத் தள்ளுபடிசெய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜந்தர் மந்தரில் கடந்த 15 நாள்களாகத்  தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

Sponsored


இந்த நிலையில், தமிழக விவசாயிகளை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.மு.க எம்பி., டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், 'வறட்சி நிவாரணத்தில், மற்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்குக் குறைவாக நிதி ஒதுக்குகிறது. விவசாயிகளின் பிரச்னையை கவனிக்கவேண்டிய மத்திய அரசு, கஜானாவை நிரப்புவதில் குறியாக உள்ளது' என்று தெரிவித்தார். 

Sponsored


அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, 'தமிழக விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி, நாகப்பட்டினத்தில் இருப்பதாகத்தான் குறிப்பிடப்படுகிறது. காரைக்காலில் இருக்கிறது என்று குறிப்பிடப்படுவதில் குளறுபடி உள்ளது. இதுதொடர்பாக, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்துப் பேசுவேன்' என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored