போலி சாதிச் சான்றிதழ் மூலம் 1,832 பேர் அரசுப் பணி!Sponsored'போலி சாதிச் சான்றிதழ்மூலம் 1,832 பேர் அரசுப் பணிகளில் உள்ளனர்' என்று மத்திய அமைச்சர் ஜித்தேந்தர் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில், போலி சாதிச் சான்றிதழ் தொடர்பான சந்தேகத்துக்கு, எழுத்துமூலம் மத்திய அமைச்சர் ஜிந்தேந்தர் சிங் பதிலளித்துள்ளார்.

'1,832 பேர் போலி சாதிச் சான்றிதழ்மூலம் அரசுப் பணிகளில் உள்ளனர். அதில், 1,200 பேர் நிதி சார்ந்த துறைகளில் பணியாற்றுகின்றனர். அவர்களில், 276 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 521 பேர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 1,035 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான வேலைகள்  நடந்துவருகின்றன' என்று அவருடைய விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored