நிருபரை தேசத் துரோகி என்று சாடும் ஹெச்.ராஜாSponsoredமோடி குறித்து கேள்வி எழுப்பிய நிருபரை, தேசத் துரோகி என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்தார்.

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'இத்தாலி நாட்டைச் சேர்ந்த வெள்ளக்காரி சோனியா காந்திக்கு எதிராக விவசாயிகள் போராடவில்லை. சோனியா காந்தியை பார்த்து ஊடகங்கள் பயந்தன. அவரை விமர்சிக்கவில்லை. தமிழ்நாட்டு ஊடகங்கள் மோடியைக் கடுமையாக விமர்சித்துவருகின்றன. மோடிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன' என்று தெரிவித்தார்.

Sponsored


அப்போது, விவசாய நிவாரணம் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ஆத்திரமடைந்த அவர், நிருபரை தேசத் துரோகி என்று விமர்சித்தார். மேலும், மோடி குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை என்றும் கூறினார். வரிப்பணம் கட்டுவதால் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது என்று கூறிய நிருபரிடம், உங்கள் வரிப்பணத்தைத் திருப்பி அளித்துவிடுகிறேன்' என்றும் தெரிவித்தார்.

Sponsored
Trending Articles

Sponsored