ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் - மு.க.ஸ்டாலின்Sponsoredபுதுக்கோட்டையில் நடைபெற்ற தி.மு.க கட்சி நிகழ்ச்சியில், அந்தக் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர், 'உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னரே சட்டமன்றத் தேர்தல் வரும் சூழ்நிலை உள்ளது' என்று தெரிவித்தார்.

மேலும், 'ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று கூறிய தமிழக அரசு, தற்போது மௌனம் காக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதற்கு, நான் சட்டமன்றத்திலே வலியுறுத்தினேன். ஆனால், அமைச்சர்கள் அதற்கு உடன்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் அளவுக்கு தமிழக அரசு இல்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே சட்டமன்றத் தேர்தல் வரும் சூழ்நிலை உள்ளது' என்றார்.
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored