அறிவாலயம் சதாசிவம் மரணம்Sponsoredதி.மு.க-வின் தலைமை நிலையச் செயலாளர் சதாசிவம், உடல்நலக்குறைவால் இன்று இரவு காலமானார். தி.மு.க-வின் நீண்ட கால உறுப்பினரான சதாசிவம், கடந்த 14 ஆண்டுகளாக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பை வகித்தார். திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், இன்று இரவு மரணமடைந்தார். 

இவரது மரணம் குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் ஆ.த.சதாசிவம் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இன்றி அதிர்ச்சியடைந்திருக்கிறேன். ஆயிரம் விளக்கு கழகச் செயல்வீரராக தன் கட்சிப்பணியைத் தொடங்கி, வட்ட பொறுப்பாளர், மாநகராட்சி மன்ற உறுப்பினர், தலைமை நிலையச் செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்து, தலைவர் கலைஞர் அவர்களின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றவராக திகழ்ந்தார்.

Sponsored


ஆயிரம் விளக்குத் தொகுதியில் நான் வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றிய நேரத்தில், தொகுதியில் எனக்குப் பேருதவியாக இருந்த திரு. ஆ.த.சதாசிவம் அவர்களையும், தலைமைக் கழகம் இருக்கும் அண்ணா அறிவாலயத்தையும் பிரித்துப்பார்க்க முடியாத அளவுக்கு, தலைமைக் கழகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தி இந்து நாளிதழில் உதவிப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற, கழகத்தின் பொதுத்தேர்தல் நடைபெறும் போதெல்லாம் அதுகுறித்த பணிகளில் தீவிரப் பணியாற்றிய அவரை இழந்திருப்பது, அவரது குடும்பத்துக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும், அவரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றி வரும் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

Sponsored


ஏறக்குறைய 14 வருடங்கள் தலைமை நிலையச் செயலாளராகப் பணியாற்றிய அவரின் அரும்பணிகள், தலைமைக் கழக நிர்வாகத்துக்கும் கழகத்திற்கும் வலு சேர்த்திருக்கிறது என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அன்னாரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.Trending Articles

Sponsored