ஆர்.கே.நகரில் துணைத் தேர்தல் ஆணையர், அதிகாரிகளுடன் ஆலோசனை!Sponsoredஇந்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில், ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் ஏற்பாடுகள் முழுமையாக நடைபெற்றுவருகின்றன. தேர்தல் ஆணையம் பிரவீன் நாயரை தேர்தல் அலுவலராக நியமித்து உத்தரவிட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, சென்னை ஆணையாளராக இருந்த ஜார்ஜுக்குப் பதிலாக, கரண் சின்ஹாவை தேர்தல் ஆணையம் நியமித்தது. வேட்புமனு பரிசீலனைகள் நிறைவடைந்த நிலையில், தொகுதியில் வாக்குச் சேகரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா சென்னை வந்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

Sponsored


அந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, பிரவீன் நாயர், மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். மேலும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.

Sponsored


படம் : வி.ஶ்ரீனிவாசலுTrending Articles

Sponsored