விஜயகாந்த் எப்படியிருக்கிறார்? பிரேமலதா விளக்கம்Sponsoredமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின்  உடல்நிலைகுறித்து அவரது மனைவி பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மார்ச் 22-ம் தேதி நள்ளிரவு திடீரென சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 'வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான். பயப்படும்படியாக ஒன்றும் இல்லை' என்று தே.மு.தி.க சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனிடையே, அவரது உடல்நிலைகுறித்து தெளிவான அறிக்கைகள் வெளியிடப்படாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த், 'தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நலமாக உள்ளார். விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார். ஆண்டுதோறும் மேற்கொள்ளும் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும்' என்றார்.

முன்னதாக, நேற்று தேர்தல் பிரசாரத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க பொருளாளர் இளங்கோவன், 'விஜயகாந்த் நிச்சயம் பிரசாரம் செய்வார். அவரது பிரசாரத் திட்டம் குறித்து முடிவு செய்யப்படவில்லை' என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored