அபராதத்தொகை வழக்கு - ஏப்ரல் 5-ல் விசாரணை!Sponsoredஜெயலலிதாவுக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை எப்படி வசூல்செய்வது என்ற வழக்கை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு நீதிமன்றம் அபராதத்தொகை விதித்தது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், சசிகலா உள்ளிட்டோருக்கு தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதித்தது.

இந்தத் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் சமீபத்தில் உறுதிசெய்து உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் 100 கோடி ரூபாயை எப்படி வசூல்செய்வது என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கர்நாடக அரசு 100 கோடி ரூபாயை எப்படி வசூல்செய்வது என்று உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்செய்தது. இன்று விசாரணைக்கு வந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏப்ரல் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored