'வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக புகார்''வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுப்பதாக புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக, தேர்தல் அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று துணைத் தலைமைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Sponsored


இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியை, துணைத் தலைமைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தேர்தல் வெளிப்படையான முறையில், நேர்மையாகவும் அமைதியாகவும் நடைபெறும். அதற்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளளன. இந்த முறை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். வாக்குச் சாவடிக்கு வெளியேயும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மத்திய பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்படுவார்கள்.

Sponsored


இந்தத் தேர்தலில், வாக்காளர்கள் அறம் சார்ந்து வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள், வாக்களிப்பதற்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்களை வாங்கக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக புகார் எழுகின்றன. இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்தத் தேர்தலில், வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கப்படும். பணம் பெறாமல் வாக்களிப்பதுகுறித்து, ஊடகங்கள் சிறப்பாக விழிப்புஉணர்வு ஏற்படுத்துகின்றன' என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored