பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை - குஜராத்தில் புதிய சட்டத் திருத்தம்!Sponsoredபசுவைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில், குஜராத் சட்டமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது, பல்வேறு தரப்பினர்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் 2016-ம் ஆண்டில் இறந்த மாட்டின் தோலை வைத்திருந்ததற்காக, ஒரு தலித் குடும்பத்தை இந்துத்துவாதிகள் கட்டிவைத்து அடித்தனர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனால், குஜராத்தில் பெரும் போராட்டம் உருவானது. அதேபோல இறந்த மாட்டின் உடலை அகற்ற மறுத்த தலித் சிறுவனைக் கட்டி வைத்து அடித்த சம்பவமும் நடந்தது. இதுபோன்று, அடுத்தடுத்த சம்பவங்கள் குஜராத்தில் நடந்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. தற்போது, குஜராத் அரசு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ.க அரசு, பசு மாடுகளைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில், புதிய சட்டத் திருத்தத்தைச் சட்டமன்றத்தில் கொண்டு வந்துள்ளது.

Sponsored


பசு மாட்டைப் பாதுகாக்கும் நோக்கத்தில், இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின்னர், அந்த மாநிலத்தில் இறைச்சிக் கூடங்கள் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Sponsored
Trending Articles

Sponsored