'தேச விரோதி' என்று பேசுவதை நிறுத்த வேண்டும் - ஹெச்.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர், பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்துப் பேசினார். மேலும், தமிழ்நாட்டு நிருபரை தேசத் துரோகி என்றார். கடந்த சில மாதங்களாக, மத்திய அரசுக்கு எதிராகப் போராடுபவர்களைத் தேசத் துரோகி என்று கூறி வருகிறார்.

Sponsored


இதற்கு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதையும் அவர்கள், தேசப்பற்றில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் ஹெச்.ராஜா நினைவில்கொள்ள வேண்டும். ஹெச்.ராஜா, தேசப்பற்றை மொத்தமாக குத்தகைக்கு வாங்கியதைப்போல பேசிவருகிறார். அவர், ஆதிக்க மனநிலையில் இருந்து பேசிவருகிறார். ஹெச்.ராஜா, தமிழர்களைத்  தேசவிரோதி என்று கூறுவதை நிறுத்த வேண்டும்' என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored