மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ்Sponsoredசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று வீடு திரும்பினார். 

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக, கடந்த மார்ச் 23-ம் தேதி இரவில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதுகுறித்து தே.மு.தி.க சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாரும் பயப்பட வேண்டாம். தொண்டர்கள் யாரும் பார்ப்பதற்கு வர வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

Sponsored


இதனையடுத்து சுமார் 10 நாள்கள் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று விஜயகாந்த் வீடு திரும்பினார். இருப்பினும் அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சைகள் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

Sponsored
Trending Articles

Sponsored