ஓட்டுக்கு பணம் கொடுக்க கட்டுகட்டாக பணம் பதுக்கலா? வருமான வரி அதிகாரிகள் ரெய்டுSponsoredஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் பார்வையாளர்கள், தொகுதியை சுற்றி வரும் நிலையில் துணை ராணுவப் படையினரும் அங்கு முகாமிட்டு இருக்கிறார்கள். இதற்கிடையில் வருமான வரித்துறை அதிகாரிகளும் ஆர்.கே.நகரை சுற்றிச் சுற்றி வருகிறார்கள். பணப்பட்டுவாடா பற்றி வரும் புகார்களை விசாரிக்க உடனே களத்தில் இறங்கி விடுகிறார்கள். இவர்களின் சுடச் சுட நடவடிக்கை அரசியல் கட்சியினரை கலங்கடிக்க வைத்து வருகிறது.

சென்னை தண்டையார்பேட்டை தண்டையார் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் டி.ராமச்சந்திரன். இவற் எம்.எச்.யு. காலனி மீனவர் கூட்டுறவு சங்க தலைவராக இருக்கிறார். அ.தி.மு.க அம்மா கட்சியை சேர்ந்தவர். டி.டி.வி.தினகரனுக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் பூத் கமிட்டி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு ஏப்ரல் 1-ம் தேதி  இரவு 10.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர், துப்பாக்கி ஏந்திய 5 போலீசாருடன் வந்தனர். ஏழரை மணி நேர சோதனைக்கு பிறகு அதிகாலை 6 மணிக்குத்தான் அங்கிருந்து வெளியேறினர். அந்த தகவல் நேற்றுதான் வெளியானது.

Sponsored


ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க அவருடைய வீட்டில் கட்டுக்கட்டாக பணம், பரிசு பொருட்களுக்கான டோக்கன்கள், அதற்கான லிஸ்ட்கள் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஓட்டுக்கு பணம் வழங்கும் பணியில்  ஈடுபடுவதற்காக வெளியூர் ஆட்கள் அவரது வீட்டில் தங்கி இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதாக கூறி அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் பல கேள்விகளை கேட்டனர்.

Sponsored


வருமான வரித்துறையினர் வந்துள்ளார்கள் என்ற தகவல் பரவியலதால் அவரது ஆதரவாளர்கள் அவர் வீட்டு முன்பு திரண்டனர்.  அவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சோதனையில் எதுவும் சிக்கியதா? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி, ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் கூறுகையில், ''அ.தி.மு.க அம்மா  கட்சியில் அவர் இருக்கிறார். எங்களுக்கு கெட்ட பெயரை உருவாக்கவும், தேர்தலில் எங்களை தோற்கடிப்பதற்காகவும் எதிரணியினர் வதந்திகளை பரப்புகின்றனர்” என்றனர். ஆளும்கட்சி வேட்பாளருக்கு நெருக்கமான ஒருவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி இருப்பது இடைத் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்Trending Articles

Sponsored